தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 25, 2017

தலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல்.
இளநரை, சிறுவயதிலேயே வழுக்கை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இதற்கு தீர்வாக இஞ்சியை பயன்படுத்தலாம் என உங்களுக்கு தெரியுமா?
தேவையான பொருட்கள்
  • இஞ்சி- 1
  • ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்
  • தேன்- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சியின் தோலை நீக்கி துருவிக் கொள்ள வேண்டும். பின் துருவிய இஞ்சி, ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் இஞ்சி மாஸ்க் தயார்.
பயன்படுத்தும் முறை
தலைமுடியை நீரில் நனைத்து, பின் தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி, ஷவர் கேப் கொண்டு தலையை முழுமையாக மூடி, 40 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை கழுவ வேண்டும்.
குறிப்பு
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகமாகி, நன்றாக வளர்ந்திருப்பதை காணலாம்.http://news.lankasri.com/beauty/03/125850?ref=lankasritop

No comments:

Post a Comment