தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 25, 2017

யாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது? உண்மை தெரிந்து கொள்ளுங்கள்

க்ரீன் டீ என்ன தான் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த பானத்தைக் குடிக்கக்கூடாது.
குறிப்பாக ஒரு நாளைக்கு 4 கப்பிற்கு மேல் க்ரீன் டீயைக் குடித்தால், அது உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள் க்ரீன் டீயை அளவாக குடித்தாலும், அது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த பானம் இரத்த சர்க்கரை அளவில் இடையூறை ஏற்படுத்தி, தலைச்சுற்றல், பதற்றம், நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.
ஆகவே சர்க்கரை நோயாளிகள் க்ரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்பிணிகள்
கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கருத்தரிக்க நினைத்தாலோ, க்ரீன் டீயை அதிகம் குடிக்கக்கூடாது.
இதில் உள்ள காப்ஃபைன் எளிதில் இரத்தத்தில் கலந்து கருவுடன் கலந்து, பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் அல்லது கருத்தரிக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.
உயர் இரத்த அழுத்தம்
க்ரீன் டீ அட்ரினலின் என்னும் ஹார்மோனின் சுரப்பை அதிகரித்து, இதய அழுத்தத்தை வேகமாக்கும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு க்ரீன் டீ நல்லதல்ல.
குழந்தைகள்
குழந்தைகளுக்கு இது நல்லதல்ல. இதில் உள்ள டானின்கள், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள காப்ஃபைன், அவர்களது உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.
இரத்த சோகை
இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 2001 ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கையில், க்ரீன் டீயை அதிகம் குடிக்கும் போது, அது உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சவிடாமல் தடுத்து, உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும் என்பது தெரிய வந்தது.
தூக்கமின்மை
க்ரீன் டீயை அதிகம் பருகினால், அது மூளையில் தூக்கத்தை தூண்டும் இரசாயனங்களைத் தடுத்து, தூக்கத்தைப் பெறவிடாமல் செய்யும்.
ஆகவே தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
http://news.lankasri.com/health/03/125794?ref=right_featured

No comments:

Post a Comment