தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 11, 2017

தாஜ்மஹாலின் மர்ம அறையில் புதைந்துள்ள ரகசியங்கள் ......!!

நீங்கள் அதிகம் கேள்விப் படாத மர்ம நிகழ்வுகள் தாஜ்மஹாலில் உள்ளன. அவற்றை கண்டறிய பலர் முயற்சித்தும் பலனின்றி அந்த முயற்சியை கைவிட்டுவிட்டனர். இந்திய அரசு நினைத்திருந்தால் தாஜ்மஹாலின் கான்ட்ரோவெர்சி என்னவென்பதை தீர்த்திருக்க முடியும், இருந்தும் அதைப் பற்றி அரசு எந்த தகவலும் தெரிவிக்க மறுப்பதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்.
அரசு தாஜ்மஹாலின் மர்ம அறைகளை திறக்காததற்கான காரணங்கள் இதுவாகக் கூட இருக்கலாம். தொடர்ந்து படியுங்கள்!
அல்லாவின் 99 பெயர்கள்
தாஜ்மஹாலின் சுவர்களில் ஆங்காங்கே பலவித வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டது போன்று இருப்பவை எல்லாம் எழுத்துக்கள் ஆகும். அவை, அல்லாவின் 99 பெயர்கள் என சொல்லப்படுகிறது. முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது இஸ்லாத்தில் கடவுளுக்கு பெயர் இல்லை என்பதுதான்.
கருப்பு தாஜ்மஹால்
இப்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலைப் போல கருப்பு தாஜ்மஹாலும் இருந்தது. வெள்ளை கற்களைக் கொண்டு கட்டப்பட்ட தாஜ்மஹாலின் பிரதிபலிப்பாக கருப்பு நிற கற்களைக் கொண்டு மாபெரும் மஹாலை கட்ட நினைத்தார் ஷா ஜகான்.
மகனே சிறை வைத்த கொடுமை
அந்த கருப்பு தாஜ்மஹாலை கட்ட திட்டமிடுவதற்குள் தன் சொந்த மகனிடமே சிறைக் கைதியானார் ஷாஜகான். அவ்ரங்கசீப் தன் தந்தையான ஷா ஜகானை சிறைவைத்தார். அதுவும் தாஜ்மஹாலின் அருகிலேயே என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.
கட்டடத்தின் மதிப்பு தெரிந்தால் வாயைப் பிளந்துவிடுவீர்கள்
300 வருடங்களுக்கு முன்னரே இந்த கட்டத்தின் மதிப்பு 32 பில்லியன் இந்திய ரூபாயாம். தற்போதைய மதிப்பு 65 பில்லியன் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்பப்பா.. அந்த காலத்திலேயே எவ்வளவு செலவில் கட்டப்பட்டுள்ளது இந்த தாஜ்மஹால்.
எந்தவொரு கட்டிடம் கட்டினாலும் அதில் சில பிழைகள் இருக்கவாய்ப்புண்டு. அது பெரியதாக எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் தாஜ்மஹாலில் ஒரு சிறு பிழை கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கட்டிடம் மிக நேர்த்தியாக இருக்கவேண்டுமென்று உறுதியாக இருந்துள்ளார் ஷாஜகான்.
தாஜ்மஹாலில் வரையப்பட்டுள்ள வண்ண வண்ண டிசைன்கள் அனைத்தும் கீழிருந்து மேலாக ஒரே மாதிரியான அளவில் இருப்பதுபோல் இருக்கும் ஆனால் அது அப்படி இருப்பதில்லை. கீழிருந்து பார்க்கும் போது அத்தனை உயரத்திலும் ஒரே மாதிரியான வடிவ உருவத்தில் இருப்பதற்காக சிறப்பு கணிதவியலாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமச்சீரான கட்டடம்
உலகின் மிக மிக அரிதான சமச்சீர் கட்டடங்களுள் ஒன்று தாஜ்மஹால். எங்கிருந்து நோக்கினும் ஒரே மாதிரியான நூறு சதவிகிதம் சமச்சீரான கட்டடம் இதுவாகும். இந்தியாவில் இந்த அளவுக்கு நேர்த்தியான கட்டடம் எதுவும் இல்லை.
இந்த கட்டடத்தை கட்ட 22 வருடங்கள் முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1631ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்டடம், 1953ல் கட்டி முடிக்கப்பட்டது.
விரல்களை வெட்டியது உண்மையா
ஷாஜகான் இது போன்று இன்னொரு அழகிய கட்டிடம் அமைந்துவிடக் கூடாது என்றெண்ணி இதன் கட்டட வடிவமைப்பாளர்களின் கை விரல்கள் அனைத்தையும் வெட்டிவிட்டதாக ஒரு கதை நிலவுகிறது. சிலர் விரல்கள் மட்டுமல்ல கை முட்டியையும் வெட்டிவிட்டார் என்கின்றனர்.
அப்படியெல்லாம் ஷாஜகான் செய்யவில்லை. தாஜ்மஹால் கட்டி முடிந்த பின்பு அதன் முதன்மை பொறியாளரான உஸ்தாத் அகமத் லாஹரி வேறு சில கட்டடங்களை கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும் மற்ற வேலையாட்கள் தாஜ்மஹாலுக்கு பின்பும் வேலை செய்து கையொப்பமிட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.
கட்டிட வடிவமைப்பாளர்கள் வைத்த டுவிஸ்ட் என்ன தெரியுமா?
கட்டிடம் முடிந்ததும் பணியாளர்களை வெட்டிவிட ஷாஜகான் எடுத்துள்ள முடிவு கட்டிட வடிவமைப்பாளர்களின் காதுக்கு எட்டியது. அப்போதுதான் அவர்கள் திட்டமிட்டு ஒரு செயலை செய்தனர். அதுதான் ட்விஸ்ட்டாக அமைந்ததது ஷாஜகானுக்கு.
கட்டிடத்தின் வெளியே யமுனை நதி ஓடுவது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் கட்டித்தின் உள்ளும் ஒரு நதி ஓடுகிறது. அது அவ்வளவு பெரிய நதி இல்லை சிறு ஓடையை விட சிறியதுதான்.
அச்சு அசலாக மற்றொரு தாஜ்மஹால்
இந்த கட்டிடத்தைப் போலவே அச்சாக ஒரு தாஜ்மஹால் கட்ட நினைத்த ஷாஜகானுக்கு பேரிடியாக அமைந்தது இதுதான். அந்த சிறிய ஓடை தொடங்கும் இடம் எதுவென்றே இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது கட்டிட வடிவமைப்பாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பொறியாளரின் சாமர்த்தியமான செயலாக இது பார்க்கப்படுகிறது.
தாஜ்மஹாலினுள் கேட்கும் அழுகுரல்
தாஜ்மஹாலின் உள்ளே பெண் ஒருவர் அழும் குரல் அடிக்கடி கேட்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும், அது ஷாஜகானின் மனைவிகளில் ஒருவரின் குரல் என்கிறார்கள் சிலர்.
சிவன் கோயில்
தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதற்கான சாட்சிகள் பலவற்றை எடுத்து முன்வைக்கின்றனர் இதை சிவன் கோயில் என்பவர்கள். 
மறைக்கப்பட்ட வரலாறு
மறைக்கப்பட்ட மர்ம அறைகளில் சிவ பெருமாளின் சிலைகள் இருக்கிறது. அதில் சிவ தலங்களுக்கான அத்தனை அம்சங்களும் உள்ளது என்கின்றனர். திட்டமிட்டே இந்த உண்மை மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாஜ்மஹால் ஷாஜகான் கட்டியதா கைப்பற்றியதா
இந்த தாஜ்மஹால் உண்மையில் தேஜே மஹாலயாவாக இருந்தால் அது முகலாயர்களின் படையெடுப்புக்கு முன்னதாகவே இருந்திருக்கும். அதை வெள்ளைக் கற்களால் அழகு படுத்தியவர்தான் ஷாஜகான். தேஜோ மஹாலயாவை கைப்பற்றி தாஜ் மஹாலை அமைத்தார் ஷாஜகான் என்றும் கருத்துக்கள் உள்ளன. - See more at: http://www.manithan.com/news/20170511126989#sthash.oNsfqXen.dpuf

No comments:

Post a Comment