தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 8, 2017

ஆண்கள் ஏன் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்?

ஆண்கள் நின்று கொன்று சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சிறந்தது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணங்கள் இதோ!
ஆண்கள் ஏன் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்?
  • ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் மற்றும் நோய்த்தொற்று உண்டாகும் விகிதம் குறைகிறது.
  • உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது சுகாதாரத்திற்கும் நல்லது எனவும் அந்த முறையால், கழிவறை, கழிவுகள் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களது வேலையும் எளிதாகும் என்று கூறுகிறார்கள்.
  • உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் வெளியேற்ற முடியும். அதுவே நின்று கொண்டு சிறுநீர் கழித்தால் அது முடியாது என்று ஆய்வு கூறுகிறது.
  • சிறுநீர் பாதை நோய் (lower urinary tract symptoms) உள்ள ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் நல்லது. ஏனெனில், முழுமையாக சிறுநீர் கழிக்க இம்முறை உதவுவதால், ஆய்வாளர்கள் இந்த முறையை பரிந்துரைகின்றனர்.
  • ஆரோக்கியமாக இருக்கும் ஆண்களை விட, ஆரோக்கிய குறைபாடு உள்ள ஆண்கள் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
http://news.lankasri.com/health/03/124810?ref=right_featured

No comments:

Post a Comment