தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, May 14, 2017

இந்த 3 உணவை சாப்பிடுங்கள்: குறட்டை பிரச்சனையே வராது

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக எளிதில் காற்று செல்ல முடியாமல் தடைபடுவதால், ஏற்படும் சப்தத்தை தான் குறட்டை என்கிறோம்.
இது ஒரு வகை சுவாசக் கோளாறு பிரச்சனை என்பதால், இதற்கு உடனடி தீர்வு காண்பது சிறந்தது. எனவே இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வினை கொடுக்கும் உணவுகள் இதோ!
ஆலிவ் ஆயில்
ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, தேவைபட்டால், அதனுடன் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து, இரவு தூங்குவதற்கும் 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
புதினா
குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதுவும் இரவு தூங்குவதற்கும் 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால், சிறப்பான பலனைப் பெறலாம்.
இல்லையெனில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
ஏலக்காய்
தூங்குவதற்கு முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று சாப்பிடலாம் அல்லது ஒரு டம்ளர் நீரில் ஏலக்காயை தட்டிப் போட்டு, சிறிது பட்டை மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூட குடித்து வரலாம்.
http://news.lankasri.com/food/03/125162?ref=lankasritop

No comments:

Post a Comment