தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 26, 2017

பேரதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட வேண்டுமா..? பண பெட்டியை இப்படி வையுங்கள் !

வீட்டில் பண பெட்டியை எந்த அறையில் வைப்பது சிறந்தது என்பது குறித்து வாஸ்து சாஸ்திரங்கள் கூறுவது என்ன? வாங்க பார்க்கலாம்.
வீட்டில் பணப்பெட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்?
வீட்டில் வடக்கு அல்லது வடகிழக்கில் பணப்பெட்டி வைக்கும் இடத்தை அமைக்க வேண்டும். ஏனெனில் வடக்கு குபேர திசை ஆகும்.
பணப்பெட்டி வைப்பதன் வாஸ்து சாஸ்திரம் சில..,
வீட்டில் பணப் பெட்டி வைக்கும் அறையை சரியாகத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வீட்டின் செல்வச்செழிப்பு அந்த அறையை அதிகம் சார்ந்துள்ளது.
வடக்கு மத்திய பகுதி குபேரனுக்கு உரிய அறையாகும். எனவே இந்த அறையில் தான் பண பெட்டியை வைக்க வேண்டும். பணபெட்டி வடக்கு திசை நோக்கி இருக்குமாறு அவசியம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வடக்கு திசைக்கு அடுத்தபடியாக தெற்கு திசையில் உள்ள அறையில் பண பெட்டியை அமைக்கலாம்.
வடகிழக்கு அறையில் பண பெட்டியை வைக்க நேர்ந்தால் அந்த அறையின் தென் மேற்கு மூலையில் அதை வைக்க வேண்டும்.
வடமேற்கு மூலையில் வைக்க நேர்ந்தால், பணபெட்டியை வடக்குச் சுவரை தொடாத வகையில் வைக்க வேண்டும்.
பணபெட்டியை ஒரு அலமாரியில் வைப்பதாக இருந்தால், அது தெற்கு சுவர் அல்லது மேற்கு சுவரை தொட்டுக் கொண்டிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பண பெட்டி வைக்கும் அறையின் கதவு ஒற்றை படையில் இருப்பது நல்லது. இதனால் பண பெட்டியில் வைக்கும் பணம் நாளுக்கு நாள் பெருகும்.
பண பெட்டி அறையின் நுழைவு வாயில் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்குத் திசைகளில் இருப்பது மிகவும் நல்லது.
வீட்டின் தென்மேற்கு அறையில் தென் மேற்கு மூலையில் பண பெட்டி வைத்தால், செல்வம் பெருகும்.
பணத்தை அலமாரியில் வைக்கும் போது அதில் கனமான பொருள் எதுவும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அலமாரியில் பணத்தை மேல் தட்டு அல்லது நடுத்தட்டில் வைக்க வேண்டும். கீழ்த் தட்டில் கண்டிபாக வைக்கக் கூடாது.
பணத்தையும் துணியையும் ஒரே பெட்டியில் வைக்கக் கூடாது. பண பெட்டியில் வாசனை திரவியங்களை போட்டு வைக்கக் கூடாது.
பணபெட்டி அசையாமல் இருக்கும்படி, உறுதியாக நிறுத்த வேண்டும். பணபெட்டியை முழுவதும் காலி செய்து விடாமல் அதில் ஒரு ரூபாயாவது போட்டு வைக்க வேண்டும்.
குறிப்பு
வீட்டின் தென் கிழக்கு அறையில் பணப் பெட்டியை எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது. ஏனெனில் அது பணப் பிரச்சனையை அதிகமாக்கும்.
- See more at: http://www.manithan.com/news/20170424126629?ref=youmaylike3#sthash.Pu9PwL1D.dpuf

No comments:

Post a Comment