தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 9, 2017

திருமணமாகாதவர்களுக்கு பங்குனி உத்தரவிரதம் ஏன் முக்கியம் வாய்ந்தது?


பங்குனி உத்தரம் கலி காலக் கொடுமைகள் தீர்க்கும் கந்தப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதமாகும்.

பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினத்தில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வகையில் இன்றைய தினம் பங்குனி உத்தர நன்னாளாகும்.

எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானுக்கும், உமாதேவியாருக்கும் சோமசுந்தரர் எனவும், மீனாட்சி எனவும் திருநாமம் கொடுத்து மணம் புரிந்த நாளும் இன்றாகும்.

இந்த நன்னாளில் உலக மகாசக்தியான பார்வதி தேவியை, பாராளும் பரமேஸ்வரன் மணம் புரிந்தார். கிரியா சக்தியான தெய்வயானையை மூவுலகும் போற்றும் அழகன் முருகப் பெருமான் கைத்தலம் பற்றினார். அதுமட்டுமன்றி இராமன்- சீதா கல்யாணமும் இந்தத் தினத்திலேயே இடம்பெற்றது.

இவ்வாறு பல தெய்வத் திருமணங்கள் இடம்பெற்ற இன்றைய தினத்தில் சிவன்-உமை, முருகன்- வள்ளி, தெய்வயானை ஆகிய தெய்வங்களை திருமணமாகாத கன்னியரும், காளையரும் விரதமிருந்து திருமணக் கோலத்தில் மெய்யன்புடன் தரிசித்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.

இதனால் தான் பங்குனி விரதத்தைக் 'கல்யாண விரதம்' எனவும் தொன்றுதொட்டுப் போற்றப்பட்டு வருகிறது.

தேவர்களை மிகவும் கொடுமைக்குள்ளாக்கி வந்த சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாராகாசுரன் மாய உருவம் எடுத்துக் கிரவுஞ்ச மலைக்குள் மறைந்திருந்த வேளை தன் ஞான சக்தியான வேலை வீசியெறிந்து மலையைக் கூறாக்கித் தாராகாசுரனை சங்கரித்த நாளும் இன்றாகும்.

பங்குனி உத்தரத்தைச் சிறப்பிக்கும் வகையில் இந்தியாவின் ஆறுபடை வீடுகளிலும் விழாக்கள் இடம்பெற்றாலும் பழனிமலை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் பங்குனி

உத்தரத் திருவிழாவும், தேரோட்டமும் சிறப்பு வாய்ந்தவை. இத் தினத்தில் பொதுவாக முருகன் ஆலயங்களில் விசேட உற்சவங்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.manithan.com/news/20170409126270?ref=builderslide#sthash.0NeELu1e.dpuf

No comments:

Post a Comment