தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 ஏப்ரல், 2017

இமய மலையில் வாழும் 8 அடி இராட்சத மனிதர்கள்? தேடல் படலம் தீவிரம்!

இமய மலைப்பகுதியில் பல ஆச்சரியங்களும் அமானுஷ்யங்களும் இருப்பதாக நம்பிக்கை உண்டு. அனாலும் அங்கு இன்று வரையிலும் முழுமையாக ஆய்வுகள் செய்யப்பட வில்லை.
இந்த நிலையில் இன்றும் இமய மலைப் பகுதியில் பனி மனிதர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த பனி மனிதர்கள் தொடர்பில் பல்வேறு விதமான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே வருகின்றது. அதாவது அறிவியல் சார்ந்த ஒரு சிலர் இதனை பொய் என கூறுகின்றனர்.
ஆனாலும் நியண்டர்தால் (Neanderthal) எனப்படும் பனி மனிதர்கள் சுமார் 350,000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள். அடிப்படையில் அவர்கள் எம் மூதாதையர்கள்.
டாவின்சியின் கொள்கைப்படி பரிணாம வளர்ச்சி இப்போது மனிதன் வரை வளர்ந்துள்ளது. அதன் படி பரிணாமமடையாத உயிரினங்கள் இன்றும் இருக்கின்றன.
அப்படியாக பரிணாமம் அடையாத நியண்டர்தால் எனப்படும் இனத்தைச் சேர்ந்த பனிமனிதர்கள் இன்றும் இமயமலைப் பகுதியில் இருக்க முடியும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.
இதேவேளை இமயமலையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களும் சுமார் 8 அடிக்கும் மேல் உயரம் மிக்க மனித குரங்கு வடிவிலான மனிதர்களை இமய மலையில் தான் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பனி மனிதர்களை கண்டுள்ளதாக புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன் படி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இமய மலைப்பகுதியில் அதனை மெய்ப்பிக்கக் கூடிய வகையில் மண்டை ஓடுகளும், எலும்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் அவை நியண்டர்தால் இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் சமயம் சார்ந்த நம்பிக்கைகளில் இமயமலையில் சித்தர்களும், கடவுள்களும் வசிப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் அங்கு வாழ்பவர்கள் யார்?
புராணக்கதைகளில் கூறப்பட்ட வானரங்களுக்கு ஒப்பான இராட்சத உயிரினங்கள் இன்றும் வாழ்கின்றனவா? இந்தக் கேள்விக்கு ஆய்வாளர்கள் கூடிய விரைவில் பதில்களைக் கூறுவார்கள்.
இந்த உண்மைகள் கண்டறியப்படும் எனின் இன்றுவரை சர்ச்சைக்குரிய விடயமாக உள்ள டாவின்சியின் பரிணாமக் கொள்கைக்கு விடைகள் கிடைக்கும் என்பதால் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/special/01/143247?ref=lankasri-home-dekstop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக