தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 23, 2017

1 மாதம்1 டம்ளர் மட்டுமே.. சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடியுங்கள்

அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால், நமது உடலில் உள்ள செல்கள் ஊட்டம் பெற்று, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • தினமும் காலையில் இதை குடித்தால், உடலில் உள்ள செல்கள் நீர்ச்சத்தைப் பெற்று, உடல் வறட்சி, சோர்வு, வறட்சியான சருமம் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • சுடுநீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.
  • உடல் மற்றும் சருமத் துளைகளில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தில் எண்ணெய் பசை உற்பத்தியை குறைத்து, சருமம் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்க உதவுகிறது.
  • ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் வெளியேற்றி சுத்தமாக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

No comments:

Post a Comment