தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, March 18, 2017

சிவப்பு, பச்சை நிற பாஸ்போர்ட்: இதற்கான அர்த்தம் தெரியுமா?

உலகில் எந்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டுமென்றாலும் பாஸ்போர்ட் தேவை.
அப்படியான பாஸ்போர்ட் மொத்தம் நான்கு நிறத்தில் மட்டுமே அச்சடிக்கப்படுகிறது.
நான்கு நிறத்துக்கான காரணத்தையும், அது பயன்படுத்தப்படும் நாடுகள் பற்றியும் காண்போம்
சிவப்பு
அதிக நாடுகள் பயன்படுத்தும் பொதுவான நிறமாக சிவப்பு நிற பாஸ்போர்ட் தான். வரலாறு மற்றும் கம்யூனிச அமைப்பு கொண்ட நாடுகளே இந்த நிறத்தை அதிகம் பயன்படுத்துகின்றன.
ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதை தான் பயன்படுத்துகின்றன. சீனா, ரஷ்யா, போலாந்து, செரிபியா போன்ற நாடுகளும் சிவப்பு நிற பாஸ்போர்டையே பயன்படுத்துகின்றன.
நீலம்
நீல நிறம் என்பது புதிய உலகத்தை குறிக்கிறது. கடந்த 1976லிருந்து அமெரிக்காவில் நீல நிற பாஸ்போர்ட்கள் தான் உபயோகப்படுத்தப்படுகின்றன.
பிரேசில், அர்ஜண்டினா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் 15 கரேபியன் நாடுகளிலும் இதுவே பயன்பாட்டில் உள்ளது.
பச்சை
சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொராகோ போன்ற இஸ்லாமிய நாடுகளில் பச்சை நிற பாஸ்போர்ட் தான் பெரும்பாலும் பயன்படுகிறது. பச்சை நிறம் இயற்கை மற்றும் வாழ்க்கையை குறிக்கிறது.
நைஜீரியா, செனிகல், நைகர் போன்ற மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகளிலும் பச்சை நிற பாஸ்போர்ட் தான்.
கருப்பு
நான்கு நிறத்தில் மிக குறைவான நாடுகளில் பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் கருப்பு தான். நியூசிலாந்தின் தேசிய நிறம் கருப்பு என்பதால் அங்கு இது பயன்ப்படுத்தப்படுகிறது.
மேலும் ஜாம்பியா, அங்கோலா, மலாவி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கருப்பி நிற பாஸ்போர்ட் தான் பயன்படுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment