தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 24, 2017

வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்க வீட்டு வாசலில் வைக்க வேண்டியவைகள்!

நாம் அனைவரும் சந்தோஷமாக வாழத் தேவையான பணத்திற்காகத் தான் பகல் இரவு பாராமல் வேலை செய்கிறோம். ஆனால் அப்படி வெறும் வேலை செய்தால் மட்டும், நம் வீட்டில் பணம் சேருமா என்ன? நிச்சயம் இல்லை. வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் நிலைத்திருக்க, வீட்டின் வாசலில் அதை வரவேற்கும் வகையில் குறிப்பிட்ட பொருட்களை வைக்க வேண்டும்.
இங்கு வாஸ்துப் படி வீட்டு வாசலில் எந்த பொருட்களை வைத்தால், வீட்டில் செல்வமும் மற்றும் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து உங்கள் வீட்டு வாசலில் வையுங்கள்.
கண்ணாடி குடுவையில் நீர் நிரப்பி, அதனுள் மலர்களை வைத்து, வீட்டின் நுழைவு வாயிலில் வைத்து வந்தால், மலர்கள் வீட்டினுள் நல்ல சக்தியை ஈர்க்கும். முக்கியமாக இப்படி செய்யும் போது, தினமும் தவறாமல் மலர்களை மாற்ற வேண்டும்.
மாவிலையால் தோரணத்தை தயார் செய்து, அதனை வீட்டின் வாசலில் கட்டி தொடங்க விட்டால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படும். முக்கியமாக இலைகள் காய்ந்தால், அதைத் தவறாமல் மாற்றிவிடுங்கள்.
தனத்தை வாரி வழங்கும் லட்சுமி போட்டோவை, வீட்டின் வாசலில் தொங்க விட வேண்டும். அப்படி தொங்க விடும் போது, காலணிகளை வீட்டின் வெளியிலேயே விட வேண்டும்.
லட்சுமி காலடி
லட்சுமியின் காலடித் தடங்களை வீட்டின் நுழைவுப் பாதையில் ஓட்டி வைக்க வேண்டும். அதுவும் லட்சுமி வீட்டினுள் நுழையும் படி ஒட்டினால், அதிர்ஷ்டமும், செல்வமும் வீட்டில் சேரும்.
கலச போட்டோ
வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள கதவுகளில் கலச போட்டோக்களை ஒட்டினால், வீட்டில் உள்ளோருக்கு எந்நோயும் வராது. மேலும் அந்த வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
ஸ்வஸ்திகா அடையாளம்
ஸ்வஸ்திகா அடையாளத்தை வீட்டின் வாசலில் வைத்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்டமும், செல்வமும் தேடி வரும்.
- See more at: http://www.asrilanka.com/2017/03/23/42024#sthash.KvYdpIHn.dpuf

No comments:

Post a Comment