தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 24, 2017

நொடிப்பொழுதில் உறைந்த கடல் அலைகள் ? அழிவில் இருந்து பூமியை காத்தது யார்? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

உலகில் மர்ம இடமாக கருதப்படும் அந்தார்ட்டிக்கா தொடர்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
விஞ்ஞானிகளை, இது எப்படி சாத்தியம் என அடி முடியும் தெரியாமல் உறைய வைத்துள்ளது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம்.
அதாவது கீழே விழும் ஒரு பொருள் அப்படியே நொடிக்கணத்தில் உறைந்து நின்று விடுமானால் எப்படியிருக்கும். அப்படியானதொரு விடயம் தான் அந்தார்ட்டிக்காவின் நடைபெற்றுள்ளது.
ஒரு காலத்தில் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கடல் அலைகள் பொங்கி மேலெழுந்து வந்த போது கீழே விழும் முன்னர் அந்தரத்தில் நொடிக்கணத்தில் உறைந்து போயுள்ளது.
அப்படியாக அந்தரத்தில் எழும்பிய அலைகளை உறைந்த நிலையில் கண்டு பிடித்துள்ளார்கள். இது எப்படி சாத்தியம் நொடி கணத்தில் உறையவைக்கக் கூடிய குளிர் வந்தது எப்படி? என்பது மிகப்பெரிய கேள்வி.
புராணக்கதைகளில் கூறப்படும் உறைய வைக்கக் கூடிய சக்தி கொண்ட தேவர்களின் கதையைப் போல் நடைபெற்றுள்ளது.
பூமி முழுவதையும் மூழ்கடிக்கக் கூடிய கடல் நீர் அதிவேகமாக கடற்கோளாக மாறி பிரளயமாக உருவெருத்து வந்ததாகவும் ஏதோ ஓர் சக்தி அதனை தடுத்து துருவப்பகுதியிலேயே உறைய வைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே பூமி முழுதும் பனியுகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
கணப்பொழுதில் ஒரு குளிர்ப்புயல், அதுவும் கற்பனைக்கு எட்டாத அளவு குளிர்மை ஏற்பட்ட காரணத்தினாலேயே அலைகள் அந்தரத்திலேயே உறைந்துள்ளது.
விஞ்ஞானிகளின் தகவல் படி துருவப்பகுதிகளில் தொடர்ச்சியாக பனிபெ்பொழிவு இடம்பெற்று நீர் உறைநிலையினை அடைந்துள்ளது என்பதே இதுவரையில் கூறப்பட்டது.
ஆனால் இப்போதைய ஆய்வுத் தகவல் படி ஏனைய பிரதேசங்களைப் போல இயங்கிக் கொண்டு இருந்த அந்தார்ட்டிக்கா திடீரென்று ஒரு கணப்பொழுதில் அப்படியே உறையவைக்கப்பட்டுள்ளது.
என்றாலும் இதற்காக காரணம் எது என்பதை மட்டும் இது வரையில் கண்டு பிடிக்கப்பட வில்லை. செயற்கையாக இது இடம் பெற்று இருக்கக் கூடிய வாய்ப்புகளே அதிகம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
அதன் படி தற்போது ஆய்வுகள் வேகமாக முடுக்கி விடப்பட்டு, மர்மங்களுக்கான விடைகள் தேடப்படுகின்றன.

No comments:

Post a Comment