தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 14, 2017

சூடான நீரில் எலுமிச்சை உப்பு கலந்து குடிப்பதால் நடக்கும் அதிசயங்கள் இதோ!

இயற்கை மருத்துவத்தில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடிப்பது.
தினமும் இதை காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் குடித்து வந்தால், நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.
சூடான நீரில் எலுமிச்சை உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்த ஜூஸை குடித்தால், ஒற்றைத் தலைவலி பரந்து போய்விடும். இது உடலில் செரோடோனினை அதிகமாக்கி, உடல் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
  • உடலில் நீர் வறட்சி, மன அழுத்தம், மினரல்ஸ் மற்றும் விட்டமின் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • எலுமிச்சையில் விட்டமின் C சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இந்த எலுமிச்சை ஜூஸை தினமும் குடிப்பதால், நமது உடம்பில் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடல் சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சனையை தடுக்கிறது.
  • தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகுவதால் நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்படும். இதனால் அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • கார்டிசோல் மற்றும் அட்ரினலின் எனும் இந்த இரண்டு ஹார்மோன்களை உப்பு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. எனவே எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பதால், நரம்பு மண்டல பாதிப்பை தடுத்து, நல்ல உறக்கம் ஏற்படுத்துகிறது.
  • எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ்-ம் நமது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • உப்பில் இருந்து கிடைக்கும் முறையான மினரல் சத்துக்கள் நமது உடம்பில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
  • உப்பில் உள்ள எதிர்மறை அயனிகள், இதய துடிப்பை சீராக்கி, உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • இயற்கையாக ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திறன் கொண்டது உப்பு. எனவே இது இயற்கை முறையில் ஆண், பெண் ஆகிய இருபாலரின் கருவளத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்துகிறது.
http://news.lankasri.com/health/03/121171?ref=lankasritop

No comments:

Post a Comment