தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 20, 2017

நம் முன்னோர் மூடரல்ல,பெற்றோரை அன்புடன் பார்க்க ஆண்பிள்ளைகளே தகுந்தவர்கள்!

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
நம் முன்னோர் மூடரல்ல என்று மீண்டும் இந்த நிகழ்ச்சி கூட சான்று பகர்கின்றது!
ஆனால்,அது அறிவாளிகளுக்கு மட்டுமே புரிந்திருக்கும்!
பெற்றோர்  ஆண் பிள்ளைகளுடன் கடைசி காலத்தை கழிக்க விரும்புவதற்கும் பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு அனுப்புவதற்கும் நிச்சயம் ஏதோ உள்காரணம் இருக்கும் என்று பார்த்தால் அது இதுவாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை!
இரக்கம் பிள்ளைகள் விடயத்தில் பெண்ணுக்கும் பெற்றோர் விடயத்தில் ஆணுக்கும் மட்டுமே உள்ளது என்ற உண்மையை இதன் மூலம் அறிந்தேன்!அதுதான் உண்மையும் கூட!
பிள்ளைக்காக ஒரு தாய் எது வேணுமானாலும் செய்வாள்,தன்னை,தன உயிரைக்கூட இழப்பாள்,அவ்வளவு பாசக்காரி!
ஆனால் பெற்றோருக்காக எதையும் விட்டுக்கொடாள்(விதி விலக்காக சிலர் இருக்கலாம்(ஆண் தோற்றத்தில் பெண் மனம் கொண்டோரும் பெண் உடலினுள் ஆண் மனம் கொண்டோரும் இருப்பதில்லையா என்ன!?),கணவனுக்கு கூட பிள்ளை பெறும் வரைதான் எல்லாமே!
ஆனால் காதலைக்கூட,கட்டிய மனைவியின் தலையணை மந்திரத்தைக்கூட உண்மையான ஆண் பெற்றோருக்காக தூக்கி எறிந்திடுவான்,குடும்பத்துக்காக தன வாழ்வையே மறந்து உழைப்பான்!(இன்று சுயநலத்தை புரட்சி என்ற பெயராலும் சினிமாக்களின் தவறான வழிகாட்டல்களாலும் ஊட்டி ஆணின் இயற்கை இயல்பை மாற்றிவருகிறார்கள்!ஆனால் இயற்கை தோற்பதில்லை என்பதே முடிந்த முடிவு)
இதைத்தான் நேற்றைய நீயா நானா கோடிட்டுக்காட்டியது!
அத்துடன் கற்பதால் இயல்பை மாற்றமுடியாது,நடிக்க மட்டுமே முடியும் என்பதையும் காட்டியுள்ளது!

No comments:

Post a Comment