தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 21, 2017

புதுகோவில் இளைஞர்களது கொக்குவில் மத்திய வாசிக சாலை


1940ம் ஆண்டளவில் கொக்குவில் புதுகோவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து கொக்குவில் மத்திய வாசிக சாலை என்ற பெயரில் ஒரு நிலையத்தை உரு வாக்கினர்கள் இந்த நிலையம் புதுகோவில் வெளிவீதியில் வடகிழக்கு மூலையில் இருந்தது பின்னரான காலபகுதியில் புது கோவில் மேற்கு வீதியில் உள்ள கட்டத்தில் கொக்குவில் சனசமூக நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்தது பின்னரான காலப்பகுதியில் இந்த நிலையம் செயற்படாமல் போனது
1970-1980 கால பகுதியில் கொக்குவில் இந்துவின் சில மாணவர்கள் பாடசாலையின் பின்னரான காலபகுதில் தமது தேவைகளுக்காக தங்களுக்கு என்று ஒரு கழகம் அமைய வேண்டும் என்று விரும்பினார்கள்
இதற்கு அமைய புது கோவில் வடக்கு வீதி இல் உள்ள கட்டத்தை குத்தகைக்கு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு கடிதம் மூலம் ஆலய நிர்வாக சபைக்கு கையளிக்க பட்டது அதன் அடிப்படையில் 20 வருட குத்தகைக்கு பெறப்பட்டது..

பின்னரான காலபகுதில் சனமூக நிலைய நிர்வாகம் ஆனது நிலையத்துக்கு ஆன சொந்தமான நிலத்தை வாங்கினார்கள் இது கொக்குவில் இந்து வாசலுக்கு வடக்கு புறத்தில் இருக்கிறது இதில் இரண்டு மாடி கட்டடம் அமைக்க பட்டு செயற்படுகின்றபோதும் ஆலையத்திற்கு உரித்தான கட்டடம் தற்போது ஒப்பந்த காலம் முடிவடைந்தும் ஆலையநிர்வாகத்திற்கு குறித்த கட்டடம் கையளிக்கப்படவில்லை

இந்த நிலையம் தொடர்ந்து சீரும் சிறப்புடனும் செயற்பட எல்லோருக்கும் பொதுவான இறைவன் ஆசீர்வதிப்பாரா?

No comments:

Post a Comment