தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

மகா சிரசு முத்திரை‘எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பது பழமொழி. அதாவது, உடலுக்குத் தலை மிகவும் முக்கியம். அந்தத் தலை தொடர்பான பிரச்னைகளுக்குத் சிறந்த தீர்வாக இருப்பது ‘மகா சிரசு முத்திரை’.
‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம். சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வத...ால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.

பலன்கள்
நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல்போதல் பிரச்னை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
படிப்பில் மந்தத்தன்மையுள்ள மாணவர்கள் இந்த முத்திரையைச் செய்வதால் மூளையில் ரத்த ஓட்டம் சீராகி, மூளை செல்கள் புத்துணர்வு பெறும். படிப்பில் கவனம் செலுத்த முடியும்.
மன அழுத்தம் குறையும். வயோதிகத்தால் ஏற்படும் சோர்வு நீங்கும்.
பார்வைத்திறன் குறைபாடு, இமைகளில் ஏற்படும் கட்டி, வீக்கம், கண்களின் வெளிபக்க ஓரங்களில் பார்வை மறைதல் போன்ற பிரச்னையைத் தீர்க்கும்.
காது குறுகுறுப்பு, காதில் நீர் மற்றும் சீழ் வடிதல், காது வலி, காதைச் சுற்றியுள்ள இடங்களில் ஏற்படும் வலி போன்றவை சரியாகும்.
தாடைகளில் ஏற்படும் வீக்கம், கழலைகள், உமிழ்நீர் சுரப்பி வீக்கம் குணமாகும்.
தொண்டை மற்றும் உள்நாக்கில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, அடிக்கடி சளி வெளியேறுதல் ஆகியவை சரியாகும்.
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.
சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்னையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.
See More

No comments:

Post a Comment