தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 26, 2017

இலங்கைத் தீவின் அழகானதும் ஆபத்துமான இடங்களில் ஒன்று... மனதை கவரும் புகைப்படங்கள்!

இலங்கையில் அழகிய இடங்கள் ஏராளம் காணப்படுகின்றன. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இந்த தீவில் அழகு எங்கும் கொட்டிக்கிடக்கின்றன.
எங்கெல்லாம் அழகு இருக்கின்றதோ அங்கெல்லம் ஆபத்து உண்டு என்பதை பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். அதற்கு இந்த இடத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அழகு எங்கு இருக்கின்றதோ, எமது கண்களும் மனமும் எம்மை அறியாமலேயே சென்று விடுகின்றன. அதே போன்று நாம் ஒரு பயணம் செய்தால், அங்கு ஒரு அழகிய இடத்தை கண்டால் எமது மனமும், உடலும் அமைதியடைந்து விடும்.
அவ்வாறான ஒரு இடம்தான் கண்டி - கடுகண்ணாவையில் உள்ள பாரிய பள்ளம்...
காற்றின் சாரலில் கடும் குளிர், கண்ணைக்கவரும் அழகிய மலைத் தொடர்கள், பார்த்தாலே நடுங்க வைக்கும் கற்பாறைகளால் உருவாகி இருக்கும் மலைகள், எட்டிப்பார்த்தால் தலை சுற்ற வைக்கும் பள்ளம்...
இந்த இடத்திலிருந்து பார்த்தால் நம்மை நாமே மறந்து விடுவோம். இதன் அழகில் மூழ்கி விடுவோம்.
இங்கிருந்து பார்த்தால் பத்தலேகல மலைக்குன்றையும் பார்க்கக்கூடியதாக உள்ளது. இந்த பத்தலேகல மலைக்குன்றை பார்க்கும் போது சீகிரிய மலைக்குன்றை பார்ப்பதைப் போல் உள்ளதாக அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இவற்றை தன்னகத்தே கொண்டு அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தளம் தான் இந்த கடுகண்ணாவை ஏற்றம்.
இந்த இடத்திற்கு வந்தால், நின்று அந்த அழகை ரசிக்காமல் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் பாதையோரத்தில் கடைகள். குளிருக்கு இதம் தரும் சோளம் விற்பனை..
இந்த இடத்தில் எத்தனை அழகு கொட்டிக்கிடக்கன்றதோ அந்த அளவுக்கு ஆபத்தும் காணப்படுகின்றது.
இந்த பள்ளத்தில் விழுந்தால் உயிர் பிழைப்பது கடினமான ஒன்று என்றே கூறவேண்டும்.
மழைக்காலங்களில் இந்த வீதி வழுக்கும் தன்மை உடையது ஆகவே கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும்.
குறித்த வீதியில் வந்தவுடன் அனைத்து சாரதிகளும் வேகத்தை குறைத்துக்கொண்டு மெதுவாக சென்றால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment