தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

மூட்டு வலியை போக்கும் பித்த நாசக முத்திரை!!செய்முறை :

பித்த நாடி கூடினால் பல விதமான நோய் குறிகள் ஏற்படும். குறிப்பாக மஞ்சள் காமாலை நோய். பித்த நீரின் அதிக சுரப்பினால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோய் ஏற்படின், கல்லீரல், பித்தப்பை போன்றவை பாதிக்கப்படும். மேலும், கோபம், பொறாமை, சகிப்புத்தன்மையின்மை, வெப்பத்தை தாங்கமுடியாத தன்மை, கண் எரிச்சல்,...

தோலில் வெடிப்பு ஏற்படுதல், அடிக்கடி சுளுக்கு, வீக்கம் போன்றவை உண்டாதல், வலியுடன் கூடிய மாதவிடாய், இளநரை, இளவயதிலேயே வயது முதிர்ந்த தோற்றம், உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி, அல்சர், போன்ற பலவித நோய் குறிகள் உண்டாகும். இவை எத்தனை நாள்பட்ட வலிகளாயினும் அவற்றை நீக்க வல்ல அதி உன்னதமான முத்திரை இது.

ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் அழுத்தி வைக்கவும். கட்டை விரலை, மோதிர விரல், சுண்டுவிரல் நுனியோடு அழுத்திப் பிடிக்கவும். இம்முத்திரை செய்வதற்கான ஏற்ற நேரம் காலை அல்லது மாலை 6 மணி முதல் 10 மணி வரை. தினமும் 30 வினாடியிலிருந்து 15 நிமிடம் செய்யவும்.

No comments:

Post a Comment