தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

மூட்டு வலி, எலும்பு பலவீனமா? அதற்கு இந்த ஒரு பழம் போதுமே!

தற்போதைய காலத்தில் பலரும் எலும்பு பலவீனம் காரணமாக மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதற்கு அன்றாடம் சாப்பிடும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணமாகும்.
இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, எலும்புகளின் வலிமையை அதிகரித்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்னாசிப் பழம் பெரிதும் உதவுகிறது.
அன்னாசிப் பழத்தில் உள்ள சத்துக்கள்
  • அன்னாசிப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் அதிகளவில் நிறைந்துள்ளது.
  • விட்டமின் C அன்னாசிப் பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகள் மற்றும் மூட்டுக்களின் வலிமைக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
  • அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய சத்து மாங்கனீசு. இது எலும்புகளில் உள்ள இணைப்புத் திசுக்களின் கூட்டுச் சேர்க்கைக்கு உதவி செய்து, எலும்புகளை வலிமையாக்குகிறது.
  • விட்டமின்கள் B6, B1 மற்றும் B12 போன்ற சத்துக்கள் அன்னாசிப் பழத்தில் அதிகமாக உள்ளது. இது எலும்புகளை வலிமைப்படுத்த உதவுகிறது.
  • அன்னாசிப் பழத்தில் உள்ள மற்றொரு முக்கிய கனிமச்சத்து காப்பர். இது எலும்புகளை ஆரோக்கியமாக பாதுகாத்து, மூட்டு மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • அன்னாசியில் புரோமிலைன் எனும் நொதி உள்ளது. இது எலும்பு முறிவின் போது ஏற்படும் வலியை குறைக்கவும், அதனை குணப்படுத்தவும் உதவுகிறது.

No comments:

Post a Comment