தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 20, 2017

பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் அதீத சக்திகள் கொண்டவர்கள்!!

எந்தவித வெளி நினைவுகளும் இல்லாது “ஓம்” என்ற ஒலியை உச்சரிக்கும் போது ஆரம்பத்தில் மந்தமாக வினாடிக்கு ஒன்று என ஆரம்பித்து படிப்படியாக வினாடிக்கு பல எண்ணிக்கையில் மாறும்.
இதை தியானத்தினூடாக முற்றாக அனுபவிக்க முடியும் எனக் கூறப்படுகின்றது. மதக்கருத்துகளைத் தாண்டி அறிவியல் ரீதியாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டதே இது.
ESP எனும் மூளையின் அதீத சக்திகள் தொடர்பில் பார்த்து வருகின்றோம். அண்ட வெடிப்பு பற்றி கடந்த பதிவில் நோக்கியிருந்தோம். இது அதன் தொடர்ச்சியும் கடைசிப் பாகமாகும்.
ஓம் என்ற ஒலி ஏன் நமது universal mind – பொது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இங்கு universal mind நமது கட்டுப்பாட்டிற்குள் வரும் போது நமது ESP சக்தி அதிகமாகும்.
எனினும், என் எண்ணப்படி இந்த universal mind ஐ கட்டுப்படுத்தும் சக்திக்குரிய அதிர்வெண்களை தவம் / தியானம் செய்யும் அனைவராலும் பெற்றுவிட முடியாது.
ஆகவே, அவரவர் முயற்சிக்கும் திறனுக்கும் ஏற்ப பயிற்சி பெற்றுக் கொள்ளும்போது அதற்கு முன்னுள்ள சில சக்திப்படிகளை அடையமுடியும்.
இவ்வாறான ஒரு நிலையையே சிவன் மற்றும் அவருடன் இருந்தவர்களின் தவம், தியானம் போன்றவைக்கு காரணமாக அமைந்திருக்க கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
மேலும் சிவன் மட்டும் அல்லாமல் யேசு, புத்தர் கூட இதே முறையில் புனிதர்களாகி இருக்கலாம். இதில் யேசுவிற்கு இயற்கையிலேயே ESP சக்தி இருந்திருக்க வாய்ப்புண்டு.
அதேபோல் புத்தர் தியானத்தினூடாக அடைந்திருக்க முடியும். என்பது அவருடைய வாழ்க்கை வரலாற்றினைப் மீட்டிப் பார்க்கும் போது தெளிவாக அறிந்து கொள்ள முடியுமானதான இருக்கும். (கடந்த பதிவுகளில் இவற்றை விரிவாக பார்க்கலாம்)
பிரபஞ்சம் திண்மம், திரவம், வாயுவின் சேர்க்கையாலேயே உருவாகியது என்றும் சொல்லலாம். விஞ்ஞானிகள் மட்டும் அல்லாது மதவாதிகளினதும் வாதமும் கூட இதுவே.
திண்ம, திரவம், வாயுவின் சேர்க்கையால் கலங்கள் உருவாகின, கலங்களின் சேர்க்கையால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என்பன படிப்படியாக உருவாகின.
ஒவ்வொரு உயிரினத்தின் உருவாக்கத்தின் அடிப்படை கலங்களில் இருந்தே உருவாகியுள்ளன என்பது விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டது.
மேலும் நாம் பேசிக்கொண்டிருக்கும் போதும், சிந்தித்துச் செயற்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் எமது உடலை விட்டு கண்ணுக்கு புலப்படாத எண்ண அலைகள் விரிந்து பரவிச்செல்கின்றன.
அந்த எண்ண அலைகள் எம்மோடு தொடர்புடையவர்களின் எண்ண அலைகளுடன் ஒத்திசைவடையும் போது, அந்த செய்தியை உணர்ந்துகொள்ளும் திறன் எமது மனதிற்கு உண்டு.
நாம் நினைப்பதை சொல்வதற்கும், நாம் நினைக்கும் போது தொலை பேசி அழைப்பை ஏற்படுத்துவதற்கும், இறப்புக்களை உணர்ந்து கொள்வதற்கும் இதுவே காரணமாக அமைகின்றது.
இவ்வாறான ஆற்றல் கொண்டது பொது மனம் என அழைக்கப்படும். ஆகவே, உயிரினங்களின் எண்ணங்கள் அனைத்துமே பொது உலகில் வியாபித்திருக்கின்றன.
உயிரினங்கள் மட்டும் அல்லாது உலக, பிரபஞ்ச தகவல்கள் கூட பொது மன உலகில் இருக்கலாம். அதனால் தான், நொஸ்ராடாமஸ் போன்றவர்கள் எதிர்காலத்தை பற்றி எதிர்வு கூற முடிந்தது.
அது மட்டுமல்ல ஐன்ஸ்டைனின் கணித தேற்றத்தை அடிப்படையாக்கக் கொண்ட காலப்பயணத்தைப் விவாதிக்கும் போது விஞ்ஞானிகள் பண்டைய உலகை அறிந்துகொள்ள பொது மன அலைகளை உணர்ந்து கொள்ளக் கூடிய இயந்திரம் ஒன்று போதுமானது என கூறுகின்றார்கள்.
விஞ்ஞானிகளின் கருத்துப்படி அக்கருவி மூலம் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணங்களை ஒன்றிணைத்து, அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் அக்கால கட்டத்தை அறிந்துகொள்ள முடியும்.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மனித மூளை எனப்படுவது அதீத ஆற்றல் கொண்ட சக்தி மிக்கது.
அதன் சிறு அளவு சக்தியை மட்டும் பயன்படுத்திக் கொண்டு வரும் மனித இனம் முழுவதுமாக அந்த சக்தியினை பயன் படுத்த ஆரம்பத்து விட்டால் பல விடைதெரியாத கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கும்.
அத்தோடு இரகசியங்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்படும் அதே போல் மனித இனம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையும் என்பது மறுக்க முடியாத உண்மையே.
அதன் காரணமாக இப்போது உலகை ஆளும் மனித வர்க்கம் எதிர்காலத்தில் பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைக்கும் வல்லமைகள் பெற்றுக் கொள்ளும் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.
கடந்த பதிவுகளை இங்கே அழுத்தி பார்க்கவும்

No comments:

Post a Comment