தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 16, 2017

வீட்டில் பல்லி, எலி தொல்லையா? உடனடியாக இதை செய்திடுங்கள்

அனைவரின் வீட்டிலும் பெரும்தொல்லையாக இருப்பது எலி, கரப்பான் பூச்சி, பல்லி போன்றவைதான்.
இவை அதிகமாக நோய் கிருமிகளையும் பரப்புகிறது. இவற்றினை ஒழிப்பதற்காக நாம் பயன்படுத்தும் ரசாயன பொருள்கள் உடலுக்கு அதிகளவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
கற்பூரம், காய்ந்த வேப்பிலை போன்றவற்றினை எரிப்பதன் மூலம் இயற்கை முறையில் கொசு போன்றவற்றினை விரட்டலாம்.
கரப்பான்பூச்சி
கரப்பான் பூச்சி தொல்லையினை ஒழிக்க மிளகுதூள், இஞ்சி வெங்காய பேஸ்ட், ஆகியவற்றினை நீரில் கலந்து தெளிக்கலாம்.
மூட்டைப்பூச்சி
வெங்காய சாற்றினை மெத்தையின் மீது தெளித்தால் அதிலுள்ள மூட்டை பூச்சி அழிந்து விடும்.
எலி
எலி வருவதை தடுப்பதற்கு புதினாவை கசக்கி போடலாம் அல்லது புதினா எண்ணெய்யை பஞ்சில் நனைத்து வைக்கலாம்.
பல்லி
முட்டை ஓடு அல்லது நாப்தலின் உருண்டைகளை வீட்டின் மூலைகளில் வைப்பதன் மூலமாக பல்லி வருவதை தடுக்கலாம்.
அதிகமாக ஈக்கள் உள்ள வீடுகளின் ஜன்னல் ஓரங்களில் துளசி செடியினை வைப்பதன் மூலம் ஈக்கள் வருவதை தடுக்கலாம் அல்லது யூகலிப்டஸ், லாவெண்டர் எண்ணெயினை தெளிக்கலாம்.

No comments:

Post a Comment