தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

பிராண முத்திரைசுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.
முத்திரைகள், கவனக்குவிப்பு, சுயசிகிச்சை, ஆற்றல் சேகரிப்பு மற்றும் சீரான ஆற்றல் விநியோகம் போன்றவற்றுக்காக செய்யப்படுகின்றன. முத்திரைகளை நிருத்த முத்திரை, சில்ப முத்திரை, யோக முத்திரை என மூன்று வகைகளாகச் சொல்வர். நிருத்த முத்திரை என்பது ...நடனஅடவுகளின் போது செய்பவை. கடவுள் சிற்பங்கள் உட்பட சிற்பங்களின் பாவங்களில் காணப்படுபவை சில்ப முத்திரை. யோக முத்திரைகள் என்பவை தியானத்தின்போதும் உடல்நலக் குறைவின்போதும் செய்பவை. யோக முத்திரையில் உள்ள சின் முத்திரையை தியானம் செய்யும்போது மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தியானம் செய்வதற்கு முன், எண்ண ஒட்டங்களைச் சீர்படுத்தவும் செய்யலாம். உடல் நலக் குறைபாடுகளுக்கு முத்திரைகள் செய்ய வேண்டுமென்றால், தியானம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு முத்திரைகளும் அதன் தனித்துவத்துவப் பலன்களைக் கொண்டது.
பிராண முத்திரை செய்யும் முறை
சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.
பிராண முத்திரையின் பலன்கள்:
சுண்டு விரல் - நீர், மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை.
இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy level) அதிகரிக்கும். பிரச்னைகளின் வீரியம் குறையும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும். உடலுக்கு சக்தி கிடைப்பதால் சோர்வு, மந்தம், களைப்பு உடனடியாகச் சரியாகும். தீவிர முடி கொட்டுதல் பிரச்னை இருந்தாலும் சரியாகும். வளர்சிதை மாற்றத்தின் அளவு அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும். விந்தணுக்களின் வேகம் அதிகரிக்கும். நரம்புப் பிரச்னைகளால் ஏற்படும் வலிகள் குணமாகும்.
கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்னைகள் சரியாகும். தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், ரிலாக்ஸ் செய்துகொண்டு மீண்டும் செய்யலாம். 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம்.
சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள் சரியாகும். இரவு நேரம், பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த மூன்று பிரச்னைகளும் சரியாகிவிடும்.
யார் செய்யக் கூடாது?
பிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் உடல் உணர்த்துகிறது. அதீத இயக்கங்கள் Aggressive behaviour) கொண்டவர்கள், இதை செய்யக் கூடாது. வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.
 

No comments:

Post a Comment