தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

உடல் எடை குறைக்கும் சூரிய முத்திரை!உடல்பருமனாக இருப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். அதிக உடல் எடையால் இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வலி, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. உடல் எடையைக் கட்டுக்குள்வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்துவிடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்த...ிரை அளிக்கும்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான தீ, கழிவுகளை எரித்து அழிக்கும் தன்மைகொண்டது. உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு, ‘சூரிய முத்திரை’ என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்துக்குத் துணைபுரிந்து, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கட்டளைகள்
சப்பளாங்கால் இட்டு 5-10 நிமிடங்கள் வரை செய்தால் போதும். தினமும் இருவேளை, வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும்.
முத்திரையைச் செய்யும் முன், அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.
அதிக உடல் எடையுடன் இருப்பவர், முத்திரை செய்யும்போது, கை, கால், தொடைகளில் வலி ஏற்படலாம். தொடர்ந்து செய்யச் செய்ய, படிப்படியாக வலி குறைந்துவிடும். வலி இருக்கும்போது, தண்ணீர் அருந்துவது முக்கியம்.
உச்சி வெயில் நேரம், வெயிலில் பயணம் செய்யும் சமயங்களில், இந்த முத்திரையைத் தவிர்க்கவும். கோடையில் தினமும் ஒரு முறை செய்தால் போதும்.
நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர் தைராய்டு, கல்லடைப்பு, நீர்க்கடுப்பு, வாய்ப்புண், வெள்ளைப்படுதல், கண் சிவப்பு, ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்னை உள்ளவர்கள், இந்த முத்திரையைத் தவிர்க்கலாம்.
எப்படிச் செய்வது?
மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்
உடலின் வெப்ப நிலையை அதிகரித்து, பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
உடலில் அதிகக் கொழுப்புச்சத்து உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில், கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.
அதிக உடல் எடையால் சிலருக்குக் குழந்தைபேறு தள்ளிப்போவதை இந்த முத்திரை தடுக்கும்.
ஹைப்போதைராய்டு பிரச்னை உள்ளவர்கள், ஒரு வேளை மட்டும் 20 நிமிடங்கள் முத்திரையைச் செய்ய, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, உடலைச் சுறுசுறுப்பாக்கும். சரும வறட்சி, குளிரைத் தாங்க முடியாதது, மந்த குணம், மனச்சோர்வு, நாக்கு தடித்தல், தொண்டை வீக்கம் ஆகியவை சரியாகும்.
பார்வைத்திறன் மேம்படும். கண்புரை வராமல் தடுக்கும். கண்களைச் சுற்றி நீர் கோத்ததுபோல இருப்பவர்களுக்கு, வீக்கம் குறையும்.
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கொழுப்புச் சேருதல் (Atherosclerosis) ஆகியவற்றைச் சரிசெய்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment