தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 மார்ச், 2017

சனிப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசிக்காரர்களின் கவனத்திற்கு

1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார்.
தனுஷ் ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் தங்க உள்ளார், இந்நிலையை கொண்டு மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் நடக்கக்கூடிய பலாப்பலன்களை ஆன்மீக ஜோதிடர் S.P.ராஜன் D.A., கணித்துள்ளார்.
தனுஷ்
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் பெயர் எழுத்துக்கள் யே, யோ, பா, பி, பூ, தா, டா
சொல்லின் செல்வர்களான நீங்கள் சொன்ன சொல் தவறாதவர்கள், தெய்வ நம்பிக்கை பிரியர்கள், கொண்ட கடவுளுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர்கள். இடம் பொருள் ஏவல் எல்லாம் இல்லாதவர்கள்.
பண்பானவர்கள் என்று எல்லாரும் பாராட்டக்கூடியவர்கள், உங்கள் ராசிக்கு சனீ ராசியின் மேல் ஜென்ம சனியாக உள்ளார்.
ஏற்கனவே 7 1/2 சனீயின் பிடியில் உள்ளீர்கள், இப்போது ஜென்ம சனீ, ஜென்ம சனீ சிறைப்பட்ட வாழ்க்கை என்பதைப் போல் எடுத்த காரிய தோல்விகள் தொடர் கதையாக இருக்கும்.
குடும்ப சூழ்நிலைகள் நன்றாக இராது, ஏதேனும் ஒரு பிரச்சனை எப்போதும் துன்பப்படுத்தும். புதுமண தம்பதிகள் என்றால் ஆரம்பமே அபசகுணமாக வரும், நிலை அறிந்து கொண்டால் நலம் உண்டாகும்.
ஆனால் நீங்கள் விட்டுக் கொடுத்து போகாததால் சிக்கல் உண்டாகும், சிலருக்கு பொலிஸ் ஸ்டேஷன் வரை பிரச்சனை ஆகலாம்.
40 வயதை தாண்டியவர்களுக்கு உடல் ஆரோக்கியம், ஆஸ்பத்திரி வரை அலையக்கூடும். வியாழன் அன்று நன்றாக உள்ளார். ஆயினும் 20-12-2018க்கு பின் இவரும் சரியில்லை. ஆயினும் உங்கள் ஜாதகப்படி நல்ல விதமான திசாபுத்தி நடந்தால் பயம் இல்லை.
நல்ல யோகம் உள்ளவர்களுக்கு 7 1/2 சனீ பற்றிய கவலை தேவையில்லை, சரியாக காரியம் நடக்கும், ஆனால் லக்கினப்படி அசுபர்களின் திசாபுத்தி என்றால் கொஞ்சம் அவஸ்தை தான்.
இருளில் ஒளியாக வியாழன் அவ்வப்போது பலன் அளிப்பார், வியாபாரிகளுக்கு நலமான காலம் தான், உணவு- உடை போன்ற வியாபாரம் வெற்றிக்கு திரும்பும்.
ராகு- கேதுவால் குடும்ப நலன், உடல்நலன் பாதிப்பு உண்டாகும், உங்களுக்கு இந்த இரண்டு திசையும் நடக்காமல் இருந்தால் நல்லது தான்.
மற்றபடி சிறிய முன்னேற்றம் உண்டாகும், வீடு- நிலம்- வாகனம் என்று வாங்கக்கூடும்.
பொருள் வரும்- செலவும் வரும். எது எப்படி ஆயினும் முதல் பகுதியில் வெற்றி உண்டு.
தனுசு ராசிப்படி சந்திர மகா திசை நடப்பில் இருக்கக்கூடாது, இவர் 8க்குடையவர் என்பதால் உடல் வியாதியை தரக்கூடும், தகுந்த பரிகாரம் செய்வது நலம்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், படித்தவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கலாம்.
உத்திராடம் இது ஒன்று தான் இந்த ராசியில் பக்குவமானது. எல்லாம் சிறப்புற வாழும். இது வாழ்க்கையின் கலை.
இந்த சனீப்பெயர்ச்சியின் முதல் ஒரு வருடம் சுபமானது, பின் 1 1/2 வருடம் தொல்லையானது. எப்படியும் சனீயின் தாக்கம் ஒவ்வொரு நாளும் இருக்கத்தான் செய்யும்.
ஒருவர் பணக்காரராக வாழ்ந்தால் நோயால் துன்பப்படுவார், ஒருவர் இல்லாதவராக இருந்தால் பணத்திற்கு துன்பப்படுவார், துன்பம் என்பது எல்லோருக்கும் எட்டி பார்க்கத்தான் செய்யும். நான் இன்பமாகத்தான் உள்ளேன் என்று திருப்திப்படுத்துங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 1, 3, 9
அதிர்ஷ்ட நிறம்- மஞ்சள்
அதிர்ஷ்ட கல்- புஷ்பராகம்
தெய்வம்- ஸ்ரீதட்சிணாமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக