தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 20, 2017

நீங்க இந்த ராசியா? அப்ப நீங்கதான் காதலில் கில்லாடி !

நீங்க இந்த ராசியா? அப்ப நீங்கதான் காதலில் கில்லாடி பாஸ்…

மேஷம்:
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வார். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்காமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கபடுவார்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாக இருப்பார். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்பு துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்களை தாங்களே ரசிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிகாரர்களுக்கு துலாம் ராசிகாரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேடை ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
கடகம்:
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் குழந்தைகள், உறவினர்கள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்தியத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிகாரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிகாரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டு. இவர்களது இதயத்தில் பல விடயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்கமாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றயவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக்கொள்ளமாட்டர்கள். ரொமாண்டிக் எண்ணம் அதிகம் இருக்கும்.
சிம்ம ராசி பெண்கள் தங்களுடைய கணவருடன் இனிமையான காதல் வாழ்கையை வாழ்வார். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுபாட்டிட்குள்ளும் வைத்திருப்பார். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்படமாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.
கன்னி:
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவர்.
காதலையும், அன்பையும் உடலளவில் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விடயத்தில் விருப்பமுடையவர்கள்.
இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குணம் உடையவர்கள். அனால் இந்த குணம் உள்ளவர்கள் இலட்ச்சியத்தை கடைபிடிக்கமாட்டர்கள். இவர்களுக்கு அன்புசன்தொசத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷத்தில் வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரகூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.
துலாம்:
எப்போதும் அடாவடியாக பேசிகொண்டிருக்கும் இவர்கள் யாரும் எதிர்கொள்ளத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர்.
இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்ததல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குனமிருக்கது. விருச்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பலகுபவர்களிடமுள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னை பார்க்க வேண்டுமென நினைப்பதால் இவருக்கு காதல் என்பது ஒரு எட்டாத கனியாகதான் இருக்கும். இவர்களது வயது ஆகா ஆகா காதல் எண்ணம் அதிகரிக்கும்.
தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பவராகவும் இருப்பார். எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் அதிலிருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுதும் சந்தோசமாகவும், அமைதியாகவும் இருப்பார்.
தனுசு:
இவர்கள் காதல் வெற்றியடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களது இலட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றியடைய அதிகம் கஷ்டபடுவர். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும் பகுதியை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவர். காதல் எண்ணம் அதிகமாக இருக்கும். துணையை வெகுவாக விரும்புவர். அவரின்பால் அதிக அன்பை செலுத்துவர். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிகாரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிகாரர்களுடன் காதல் வயப்பபடுவர்.
மகரம்:
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்கமாட்டார்கள்.
மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவார். தனுசு ராசிகாரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிகாரர்களுக்கு காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலர்களாக இருப்பார். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது.
காதலை பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பார். இவர்களது கற்பனை வித்தியாசமாக இருக்கும். புரிந்துகொள்வதும், புரிந்து வைத்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.
கும்ப ராசிகாரர்களுக்கு எதிர்பாலாருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.
மீனம்:
மீனா ராசிகாரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருக்கும். மீன ராசிக்காரர்களின் சுபாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார்.
எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது.
இந்த ராசிகாரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் செய்து முடிப்பர். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்க முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிகாரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.
- See more at: http://www.asrilanka.com/2017/03/19/41848#sthash.xY3HX2xU.dpuf

No comments:

Post a Comment