தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 14, 2017

பலாப்பழம்...


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.
பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.
இப்பழத்தில் விட்டமின் A மற்றும் விட்டமின் C அதிகமாக உள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ் பரஸ் போன்ற சத்துகள் உள்ளது. பலாக் கொட்டைகளில் விட்டமின் B-1, விட்டமின் B-2 உள்ளன.
மருத்துவ பயன்கள்
பலாப்பழம் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வரா மல் தடுக்க பலாப்பழம் உதவுகிறது.
பலாப்பழத்தில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்ப தால் உடல் எடையினைக் குறைக்க பெரிதும் பயன்படுகி றது.
நடைபெற்றறு முடிந்த சில ஆராய்ச்சிகள் மூலம் ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் பலாப்பழத்தில் இருப்பதாக கண்டறி யப்பட்டுள்ளது. எனவே இது புற்றுநோயினைத் தடுக்க சிறந்த மருந்தாக உள்ளது.
பலாப்பழத்தில் உள்ள சத்துகள் தோல் சுருக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதால் வயது முதிர்வி னைத் தள்ளிப் போடுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்துடன் சாப்பிட் டால் இதயம், மூளை வளர்ச்சியடைவதுடன் நரம்புகளும் வலுவடையும் ஆற்றல் கொண்டுள்ளது.
பலாப்பழத்துடன் சிறிது நாட்டு சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் வல்ல மையை பெற்றுள்ளது.
பலாப்பழத்தில் விட்டமின் A உள்ளதால் கண் பார்வைக்கு ஏற்றதாக உள்ளது.
பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத் துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.
பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றை பலாப்பழம் குணப்படுத்துகிறது.
பலாப்பழம் உடல் சூட்டை தனிக்கும் ஆற்றல் பெற்றது.
ஆஸ்த்துமா, தைராய்டு, அல்சர் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு பலாப்பழச் சாற்றை கலந்துக் குடித்தால் விரைவில் குணமாகும்.

No comments:

Post a Comment