தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 27, 2017

தமிழர் பற்றிய முக்கிய செய்தி!! அறிவது.. பகிர்வது.. கட்டாயம்!! (படங்கள் இணைப்பு )

கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது. “தமிழ் மொழியைச் சமயச்சார்பற்ற மொழி” என்று மதிப்பீடு செய்த அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை உறுதி செய்கின்றன.

பதிவு மறுமொழிகள்

இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்மீது திணித்து வருகிறது.

ஆனால், ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது.

இந்து மதவெறிக் கும்பலின் ஆரிய பித்தலாட்டங்களுக்கு எதிரான மிக முக்கியமான இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக்கட்டை போடும் வேலையிலும் மத்திய அரசு இறங்கியது.

பா.ஜ.க. அரசின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தின் அறிவுத்துறையினர், அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் எனப் பலரும் கண்டனங்கள் எழுப்பிய பிறகு, கீழடி ஆய்வுகள் தொடரும் என அறிவித்துத் தற்காலிகமாகப் பின்வாங்கியிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மைய அரசின் தொல்லியல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டு பிரிவுகளாக அகழாய்வு நடத்தியது.

வைகையாற்றுக் கலாச்சாரம் என ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் � என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது.

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.

மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன.

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன.

ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுடுமண் உறைகேணிகள் இருந்ததற்கான சான்று.

கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது.

மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

சென்ற ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றட்டிருக்கிறது.

அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார்.

கீழடியில் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தும், வெறும் 50 செண்ட் நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்தவை. மொத்தமாக உள்ள 110 ஏக்கர் நிலத்திலும் அகழ்வாய்வு செய்தால், அது தமிழக வரலாற்றை மட்டுமல்ல; இந்திய வரலாற்றையே திருப்பிப் போடும் ஒரு அகழ்வாராய்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

1970-க்குப் பிறகு தமிழகத்தில், மைய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்படும் மிகப்பெரிய ஆய்வு கீழடி மட்டுமே.

கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனென்றால், பழங்காலத் தமிழர்களின் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில்தான் மதங்கள் தோன்றியிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கூறுகின்ற, மதங்கள் தோன்றுவதற்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளம்தான் கீழடி.

“தமிழ் மொழியை ஒரு சமயச்சார்பற்ற மொழி” என்று மதிப்பீடு செய்த மொழியியல் அறிஞர் கால்டுவெல்லின் கருத்துக்குச் சான்றாக கீழடி நாகரிகம் இருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

பெருந்தெய்வங்கள் மற்றும் மதமற்ற சமூகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை நிறுவுகிற ஆய்வுகளை, இந்தியச் சமூகமே வேத-வைதீக மரபுடையது எனப் பிதற்றிக் கொண்டிருக்கும் காவிக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


மட்பாண்டங்கள் உட்புறத்தில் சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சான்று

அதனால்தான் இந்த ஆய்வை, அதன் துவக்க நிலையிலேயே நிறுத்தி வைப்பது என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. குஜராத்தின் தொலவிராவில் 13 ஆண்டுகள், லோத்தலில் 5 ஆண்டுகள், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கீழடி ஆராய்ச்சியை மட்டும் இரண்டே ஆண்டுகளோடு மங்களம் பாடுவதற்கு பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்பட்டது.

தற்போது வேறு வழியின்றி மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடைபெறும் என அறிவித்திருக்கிறது. தமிழக மக்கள் விழிப்போடு இல்லையென்றால், இந்த அறிவிப்பைக் கிடப்பில் போட்டுவிடவும் காவிக் கும்பல் தயங்காது.

மேலும், அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 (கார்பன் தேதியிடல்) பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறைதான் முடிவு செய்யும். இந்நிலையில் இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில் இருந்து 28 பொருட்களையும், தொலவிராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் குறைந்தது பத்து மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், இரண்டை மட்டுமே கார்பன்�14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்நதியே சிந்து சம்வெளி நாகரிகத்திற்கான தொடக்கம் எனக் கூறி, தாங்கள் இதுவரைப் பிரச்சாரம் செய்தது அனைத்தும் உண்மை என நிரூபிக்கக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற இக்காவிக்கூட்டம், அறிவியல்பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை மட்டும் மாற்றந்தாய் மனப்பாங்கு கொண்டு பார்க்கிறது. மேலும், அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களைக் காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற உண்மையை இந்துத்துவா கும்பல் எப்போதும் ஏற்றுக் கொள்வது கிடையாது. காவிக்கு ம்பலின் வரலாற்றுத் திரிபின் படி , ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள்.

அதேபோன்று வேதங்களில் கூறப்பட்டுள்ள கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம், அதனைத் தாண்டி வேறு எந்த கலாச்சாரமும் இந்தியாவில் இருக்கவில்லை. சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்றும், மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்துதான் தோன்றின என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், திராவிடர் என்ற கருத்தாக்கம், ஆரிய-திராவிடப் பாகுபாடு, திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியது ஆகியவை ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எனக் கூறி, தொன்மை வரலாறையெல்லாம் மறுத்து வருகிறது.

வட்டவடிவிலான உலைகள்
ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே நாடு � இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கு ஏற்றவாறு நம் நாட்டின் வரலாற்றைக் கட்டமைக்கவே இந்துத்துவா கும்பல் விரும்புகிறது. ஆனால், இதனை உண்மை என நிறுவுவதற்கு அவர்களிடம் சான்றுகள் எதுவும் இல்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள கற்பனைகளை, கட்டுக் கதைகளை மட்டுமே அவர்களால் சான்றுகளாகக் காட்ட முடிகின்றது. இந்தக் கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல் துறையின் முழுநேரப் பணியாக அவர்கள் மாற்றியிருக்கின்றனர்.

காவிக்கும்பலின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு வரலாறு நெடுகிலும் தமிழகம் ஒரு எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது. ஆரிய-திராவிட முரண்பாட்டையும் ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப்படுத்தியதையும் முன்வைத்துத் தமிழகம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி என்ற பிரச்சாரத்திற்கு எதிராக, தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் சார்பு இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய செம்மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் கால்டுவெல்லால் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமஸ்கிருத, ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக கீழடி அகழ்வாய்வு அமைந்திருக்கிறது.

சீப்பை ஒளித்துவைத்துவிட்டுக் கல்யாணத்தை நிறுத்திவிடும் முட்டாள்தனம் போல, கீழடி அகழ்வாராய்ச்சியைத் தடுப்பதன் மூலம் திராவிட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிடலாம் எனப் பகற்கனவு காண்கிறது, காவிக் கும்பல்.

27 Mar 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1490597947&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment