தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 14, 2017

இந்த தருணங்களில் மட்டும் தண்ணீரை குடித்து விடாதீர்கள்... ஆபத்து!

உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தண்ணீர் தான் சிறந்த ஒரு தீர்வாக உள்ளது.
அத்தகைய தண்ணீரை ஒருசில தருணங்களில் குடித்தால், அது நமது உடலுக்கு ஆபத்தாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?
தண்ணீரை எப்போது குடிக்க கூடாது?
  • ஒருவர் ஏற்கனவே அளவுக்கு அதிகமான நீரைக் குடித்தப் பின், தேவையில்லாமல் நீரைக் குடிக்கக்கூடாது. ஏனெனில் அது நமது உடலில் உள்ள இயற்கையான உப்புச்சத்தை வெளியேற்றி பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்குகிறது.
  • சிறுநீர் வெளியேற்றப்படும் போது, மஞ்சளாக இல்லாமல், தெளிந்த வெள்ளை நிறத்தில் இருந்தால், அதற்கு உடலில் போதுமான அளவில் நீர்ச்சத்து உள்ளது என்று அர்த்தம். எனவே அந்த நேரங்களில் நீரை அதிகம் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • உணவு சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் அளவுக்கு அதிகமாக நீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் உடல் ஆரோக்கியத்தில் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
  • கடுமையான உடற்பயிற்சியை செய்த பின், உடலில் உள்ள எலக்ட்டோலைட்டுக்கள் வியர்வை மூலமாக வெளியேற்றப்பட்டிருக்கும். எனவே இந்த நேரத்தில் நீரை குடிக்கக் கூடாது.
  • தாகத்தை தணிப்பதற்கு நீரைக் குடிப்பது தான் சிறந்தது. அதற்கு மாறாக குளிர்பானங்களைப் பருகினால், அது பசியை அதிகமாக தூண்டி உடல் பருமனை ஏற்படுத்திவிடும்.


No comments:

Post a Comment