தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, February 24, 2017

மலம் கழிப்பதில் கஷ்டமா? அப்போ இதை செய்யுங்கள்

ஜீரண மண்டலத்தின் ஒருபகுதி தான் குடல். இந்தக் குடலில் ஏற்படும் கோளாறுகள் நமது உடலின் இயக்க நிலையை பாதித்து மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
சிலர் இந்த மலச்சிக்கல் பிரச்சனை காரணமாக உடல் மற்றும் மனம் ரீதியான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனையை போக்க என்னசெய்ய வேண்டும்?
மலச்சிக்கல் பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படுகிறது.
எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் மலம் கழிக்கும் போது, நேராக அமர்ந்து, முதுகெலும்பை வலைக்காமல், வயிற்றை வெளியில் தள்ளியபடி, கால்களை ஓய்வு நிலையில் வைத்து, வயிற்று பகுதியில் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அழுத்தம் கொடுப்பதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இது மாதிரியான பிரச்சனையை அதிகமாக சந்திக்க நேரிடும்.
எனவே கர்ப்பிணிகள் குழந்தை பிறப்பதற்கு முன் இந்த முறையை பின்பற்றினால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

No comments:

Post a Comment