தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சளி, இருமலுடன் ரத்தம் வருகிறதா?

காற்றுக்குழாயிலும் உணவுக்குழாயிலும் இருக்கும் மியூகஸ் க்ளாண்ட்ஸ் (Mucus Gland) நமக்கு சளியை உடலில் சுரந்து கொண்டே தான் இருக்கின்றன.
இப்படி, நடைபெறாவிட்டால் உணவு, சுவாசம் இயல்பாக நடைபெறாது. சளியின் அளவு அதிகமாகும் போதுதான் நமக்கு சளி பிடித்துவிட்டது என தெரியவருகிறது.
நாளொன்றுக்கு 150 மிலி சளி வெளியேறுவது இயல்பானது. மேலும் பருவகால மாற்றத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சளி இருப்பதும் சதாரண ஒன்று.
ஆனால், வெளியேறும் சளியின் அளவு 150 மிலிக்கு அதிகமாக இருந்தால் அது பிரச்சனைக்குரியது. இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தாலும் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
அது காசநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். பொதுவாக இரவில் நீங்கள் தூங்கும்போது, நுரையீரலில் அதிகசளி தேங்கி இருக்கிறது. காலையில் இருமும்போது அதிக சளி கெட்டியாக வெளிவருகிறது. இச்சளியே பரிசோதனைக்கு மிகவும் ஏற்றது.
ஆகவே காலையில் பல் துலக்குவதற்கு முன், வெளியாகும் சளியின் மூலம் சளிபரிசோதனை செய்வது மிகவும் நல்லது. இதனால் உங்கள் நுரையீரலை தாக்கிய கிருமிக்கு சரியான மருந்தை கண்டறிய முடியும்.
உங்களுக்கு தொடர்ந்து இருமல் இருந்ததால் தொண்டையில் புண் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் இருமலுடன் சிலசொட்டு ரத்தம் வருவதற்காக பயப்படத் தேவையில்லை.
ஆனால் ஒருமுறை ரத்தம் வந்தாலும், உங்கள் நுரையீரல் மற்றும் காது, மூக்கு, தொண்டையினை முழுமையாக பரிசோதிப்பது அவசியம். மேலும் ஒரு நுரையீரல் நிபுணரையும் காது, மூக்கு, தொண்டை நிபுணரையும் ஆலோசித்து ரத்தத்திகான காரணத்தை கண்டறிவது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக