தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, February 22, 2017

நாரதர் புராணத்தின் படி யாருக்கெல்லாம் மறுபிறவி கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா?

மோக்ஷம் அடைய பல பிறவிகள் எடுக்க வேண்டும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அவரவர் செய்யும் கர்மா அதற்கான பிரதிபலன்கள் பொறுத்தே ஒருவரது மறுபிறவியும், மோக்ஷமும் அடைகின்றனர்.

இதில், யாரு யாருக்கு மறுபிறவி இல்லை என நமது புராணம் கூறியுள்ளவை பற்றி காணலாம்…
எமதர்மராஜா!
1
நிகழும் பிறவியின் இரட்சிப்பு படி அந்த உயிருக்கான கர்மாவின் விதிப்படி ஒருவரது பிறவிகள் அந்த பிறவியின் பயன்கள் அமையும் என எமதர்மராஜா கூறுகிறார்.
நாரத புராணம்!
2
எமதர்மராஜா மற்றும் அரசன் பாகீரதன் நாரத புராண உரையாடலில், ஒரு உயிரின் பிறப்பு – இறப்பு சுழற்சி எப்படி நிகழும், எப்போது முடிவுபெறும் என்பது பற்றி அழகாக உரையாடி இருப்பார்கள்.
பிறப்பும், இறப்பும்!
3
அதில், மனிதர்கள் ஒரு சில செயல்களில் ஈடுபடுவதன் பயனால் இந்த பிறப்பு, இறப்பு எனும் சக்கர சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மறுபிறவி இன்றி மோக்ஷம் அடையலாம் என நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது….
ஏகாதேசி!
4
ஏகாதேசி நாளில் கடவுள் விஷ்ணுவை நறுமண மலர்கள் கொண்டு வணங்கும் நபர்களின் பாவங்கள் கழியும் என கூறப்பட்டுள்ளது.
நெய்விளக்கு!
5
கடவுள், விஷ்ணு மற்றும் சிவனை நெய்விளக்கு ஏற்றி வணங்கி வந்தால் அது கங்கையில் குளித்து பாவத்தை கழித்ததற்கு சமம். இதனால் புண்ணியம் கூடும், பாவங்கள் கழியும் என கூறப்பட்டுள்ளது.
கடவுள்!
6
துளசி இலைகள் கொண்டு கடவுள் விஷ்ணு மற்றும் தேவியை வணங்கி வந்தால் பாவங்கள் தீரும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment