தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

கேரளத்துப் பெண்கள் அழகாக இருப்பதற்கு இதுதான் காரணமா?...


பெண்களின் அழகு பராமரிப்புகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு.
அதிலும் மலையாள பெண்கள் என்றாலே அவர்களின் நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம், கொழுகொழுவென்று இருக்கும் கன்னங்கள் இவை அனைத்தும் தான் நம் நினைவுக்கு வருகிறது.
எனவே இவர்களின் இந்த சிறந்த அழகிற்கு, அவர்களின் அழகு பராமரிப்பு தான் முக்கிய காரணமாகும்.
மலையாள பெண்கள் அழகின் ரகசியங்கள்
மலையாள பெண்கள் எப்போதும் தங்களின் முகத்திற்கு, கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் இயற்கைப் பொருட்களையே அதிகமாக நாடுவதால், அவர்கள் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது.
கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, காரணம், அவர்கள் தினமும் குளிக்கும் போது, மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்த மஞ்சளை தங்களின் உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.
தினமும் கேரளப் பெண்கள் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதுடன், தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.
மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது முகத்திற்கு போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணமாக உள்ளது.
கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் அவர்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தி பூவை சீகைக்காயைப் போல அரைத்து தங்களின் கூந்தலுக்கு பயன்படுத்துவார்கள்.
கேரளத்து பெண்களின் கொழுகொழு கன்னங்களுக்கு, தினமும் அவர்கள் இரவில் படுக்கும் போது, சிவப்பு நிறமுள்ள சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள்.
கேரளத்து பெண்கள் தங்களின் தலையில் பொடுகு வராமல் தடுப்பதற்கு, தினமும் இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை கழுவி வருவார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170122124453?ref=builderslide#sthash.8lNHrNnV.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக