தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஜனவரி, 2017

அசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

இந்துக்களின் முறைப்படி அசைவம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக் கூடாது என்று கூறப்படும் பழக்கமானது, நமது முன்னோர்களின் காலத்தில் இருந்தே பழக்கத்தில் இருந்து வருகின்றது.
ஆனால் அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசித்தது உண்டா?
அசைவம் சாப்பிட்ட பின் கோவிலுக்கு ஏன் செல்லக் கூடாது?
நாம் சாப்பிடும் உணவு மற்றும் மனதிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படியெனில் உதாரணமாக நாம் தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதை போன்ற உணர்வுகள் ஏற்படுவதும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கும், நமது மனதிற்கும் தொடர்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது.
கோவிலுக்குச் செல்லும் போது, நம்முடைய மனம் மற்றும் உடல் அளவில், சுத்தமாக செல்ல வேண்டும்.
நாம் சாப்பிடும் அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு, அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், அது நமது மனதளவில் ஒரு வகை மந்தமான நிலையை ஏற்படுத்துகிறது.
எனவே நம் மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது, அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.
ஏனெனில் அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
இதனால் தான், நாம் கோயிலுக்குச் செல்லும் போது, அசைவம் சாப்பிடாமல், எளிமையான உணவை மிதமான அளவில் சாப்பிட்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பு
ஒருவேளை நாம் அசைவ உணவைச் சாப்பிட்ட பின் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலைகள் ஏற்பட்டால், நாம் சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக