தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 2, 2016

ஹிட்லரின் இந்த ரகசியம் தெரியுமா?...

வரலாற்றை நாம் திரும்பி பார்க்கிறோமோ இல்லையோ, வரலாறு நம்மை திரும்பி பார்க்க வைக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த மனிதர் தான் அடால்ப் ஹிட்லர்.
உலகில் ஜேர்மனியரே உயர்ந்த இனத்தினர், உலக மக்கள் அனைவரும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்பதற்காக நாஜி கட்சியை ஆரம்பித்தார்.
இந்த நாஜி கட்சியினர், யூத மக்களை கொன்று குவியல் குவியலாக போட்டு வைத்த புகைப்படங்கள் இன்று வரை இணையங்களில் வெளியாகி ஹிட்லரின் கொடூர முகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.
ஆனால், அரக்க செயல்கள் புரிந்துவந்தாலும் இவரின் இரக்கமான மனதுக்குள் காதலும் இருந்துள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். கடைசி காலத்தில் ஹிட்லருடன் சேர்ந்து உயிரிழந்த Eva Braun என்பவர் தான், இவரின் காதலி என கூறப்படுகிறது.
மேலும், Geli Rauba மற்றும் Erna Hanfstaengl என்ற அழகிய பெண்களுடனும் இவருக்கு காதல் இருந்துள்ளது என கூறப்படுகிறது. மொத்தத்தில், இவரது வாழ்வில் 3 பெண்களுக்கு இடமுண்டு. Geli Rauba என்பவர் மீது முதன் முதலாக காதல் கொண்ட ஹிட்லர், அவருடன் தனது வாழ்க்கையை சந்தோஷமாக நடந்தி வந்தார்.
1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி இவர் உயிரிழந்தபின்னர், தனது வாழ்க்கையே இருண்டுவிட்டது என கூறிய ஹிட்லர். யாருமின்றி தனிமையில் வாழ்வது போன்று உணர்ந்துள்ளார்.
அப்போது தான் ஹிட்லரின் இருண்ட வாழ்வில் ஒளியேற்ற வந்தார் Eva Braun. ஜேர்மனியை சேர்ந்த மொடலான இவரை, 1929 ஆம் ஆண்டு ஜேர்மனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வைத்து ஹிட்லர் சந்தித்துள்ளார்.
அப்போது, இவர்கள் இருவரும் சரியாக பேசிக்கொள்ளாவிட்டாலும், முதல் மனைவியின் இறப்பிற்கு பின்னர் இவாவுடன், இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக காதலித்து வந்ததால், ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். இவா தனது டைரியில், "நீ எங்கு சென்றாலும் நான் உன்னை பின்தொடர்ந்து வருவேன். அது உன் இறப்பாக இருந்தாலும் சரி" என எழுதியிருந்தார்.
இவரின் எழுத்துக்கள் உண்மையாகும் விதத்தில், 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி ரஷ்யபடைகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது, எதிரிகளிடம் சிக்கிகொள்ள கூடாது என்ற நோக்கில் தற்கொலை முடிவை எடுத்தார் ஹிட்லர். இதற்கு இவரது காதலியும் சம்மதிக்கவே, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இருவரும் உயிரிழந்தனர்.
- See more at: http://www.manithan.com/news/20161120122893?ref=youmaylike2#sthash.YXoF7Lg7.dpuf

No comments:

Post a Comment