தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 டிசம்பர், 2016

ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள்…!

உலகின் பல இடங்களும் உலகம் வெப்பம் அடைதல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்கள், மனிதர்களின் உடல் ஆரோக்கியம் என அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வருடம் தான் உலகின் பல இடங்களிலும் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகளவில் பதிவானது. பகலில் அதிக வெப்பம் மற்றும் இரவில் கடுமையான குளிர் காரணமாக ஆஸ்திரேலியாவின் கூபர் பேடி எனும் இடத்தில் மக்கள் பூமிக்கு அடியில் வாழ துவங்கியுள்ளனர்…
அடிலெய்ட்!
அடிலெய்ட்-ல் உள்ள ஒரு பகுதி தான் கூபர் பேடி. இவர்களது மொத்த நகரமைப்பும் பூமிக்கு அடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை கண்டால் நீங்கள் நிஜமாகவே அசந்து போய்விடுவீர்கள்.
எல்லாமும் உண்டு!
இங்கு ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட், பார், சர்ச், வீடுகள் என எல்லாமும் உண்டு. மக்கள் இங்கு தான் பூமிக்கு அடியில் வாழ்ந்து வருகின்றனர். குளுமையான இரவு மற்றும் கொளுத்தும் பகலில் இருந்து காத்துக்கொள்ள இவர்கள் பூமிக்கு அடியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர்!
ஏறத்தாழ 4000-திற்கும் மேற்ப்பட்டவர்கள் கோடை காலத்தில் பாதுகாப்பாக வாழ பூமிக்கு அடியில் தான் வாழ்கின்றனர். இங்கு கோடை காலத்தில் வெப்பம் 45 டிகிரி வரை நீடிக்குமாம்.
சுரங்கம்!
கூபர் பேடி எனும் இவ்விடம் ஒரு காலத்தில் ஒரு வகையான மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்கமாக இருந்துள்ளது என கூறப்படுகிறது.
தண்ணீர் கஷ்டம்!
இங்கு தண்ணீர் கொண்டு வருவது தான் சற்று கடினம். இதற்கான பம்ப் மூலமாக 24 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இவ்விடத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
சுற்றுலா இடம்!
இன்று கூபர் பேடி ஒரு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. இங்கு மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்க வேலை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இணையாக சுற்றுலா மூலமாகவும் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கிறதாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக