தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, December 12, 2016

சுவிஸில் திருமணம் செய்வது எப்படி? சட்டரீதியான விரிவான தகவல்கள்

சுவிட்சர்லாந்து நாட்டு குடிமகன் அல்லது குடிமகளை திருமணம் செய்ய பின்பற்ற வேண்டிய சட்ட விதிகளை பற்றி இதில் விரிவாக பார்ப்போம்.
சுவிஸில் குடியேறி அந்நாட்டை சேர்ந்த பெண் அல்லது ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் சட்ட ரீதியாக சில விதிமுறைகளை பின்பற்றி அதற்கான ஆவணங்களை உள்ளூர் சிவில் பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்
சட்டரீதியான தகுதிகள்
  • நீங்கள் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவர் உங்களுக்கு எதிர் பாலினமாக(opposite sex) இருக்க வேண்டும்.
  • நீங்களும் நீங்கள் திருமணம் செய்யவுள்ள ஆண்/பெண் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இருவருக்கும் திருமணத்திற்கான ஒப்புதல் சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • நீங்கள் இருவரும் சுவிஸ் குடிமக்களாக இல்லாவிட்டால், திருமணம் நடக்கும்போது நீங்கள் சுவிஸ் சட்டபூர்வமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
திருமணத்திற்கான சட்டப்பூர்வ தடைகள்
  • உங்கள் இருவரில் ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் அல்லது பதிவு செய்யப்பட்ட உறவு முறையில் இருந்தாலும் திருமணத்திற்கு அனுமதி கிடைக்காது.
  • மற்றவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் திருமணத்திற்கு அனுமதி கிடைக்காது.
  • திருமணத்திற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்
  • திருமணத்திற்கு முன்னதாக தேவையான விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • உங்களுடைய சூழலுக்கு ஏற்ப பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க நேரிடும்.
  • திருமணத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் நாங்களே பூர்த்தி செய்துக்கொள்கிறோம் என இருவரும் பதிவு அலுவலர் முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
  • சிவில் பதிவு அலுவலகத்தை தொடர்புக்கொள்ள வேண்டும்
  • திருமணத்திற்கான ஒப்புதல் கிடைத்த நாள் முதல் அடுத்த 10 அல்லது 3 மாதங்கள் வரை திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் தயார் படுத்தப்படும்.
  • இத்திருமணம் சட்டப்பூர்வமானது என்பதால் சிவில் பதிவு அலுவலக வளாகத்தில் வெளிப்படையாகவே நடைபெறும்.
  • இத்திருமணத்தை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் 2 வாலிபர்கள்(சாட்சியாளர்கள்) இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும்.
  • மணமகன், மணமகள் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் குறிப்பிட்ட சில ஆவணங்களில் கையொப்பம் இடவேண்டும்.
  • திருமணத்திற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களும் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
திருமணத்திற்கான கட்டணம்
திருமண ஏற்பாடுகளுக்கான கட்டணம் சுவிஸ் நாடு முழுவதும் 300 பிராங்க் முதல் 400 பிராங்க் வரை வசூலிக்கப்படும். இதை தவிர்த்து கூடுதலான கட்டணங்களும் செலுத்த நேரிடலாம்.
கிறித்துவ தேவாலயத்திலும் திருமணம் செய்துக்கொள்ளலாம். ஆனால், சிவில் பதிவு அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பின்னரே இதனை நடைமுறைப்படுத்த முடியும்.
உங்களது திருமணம் தொடர்பாக சிவில் அலுவலக அதிகாரிகள், உங்களுக்கு வேலை வழங்கிய நிறுவன நிர்வாகிகள், வரித்துறை அதிகாரிகள், வங்கி மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு முறையான தகவல்களை அளிக்க வேண்டும்.
முக்கிய ஆவணங்களை எப்படி மாற்றிக்கொள்வது?
  • திருமணத்திற்கு பிறகு உங்களுடைய பெயரை மாற்றிக்கொள்ள விரும்பினால், சில ஆவணங்கள் தேவைப்படும்.
  • கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை
  • முக்கிய காப்பீடு ஆவணங்கள்
  • ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு ஆவணம்
  • வங்கி மற்றும் கிரிடிட் அட்டை தகவல்
  • பூர்வீகமாக எந்த நாட்டை சேர்ந்தர் என்பதற்கான ஆவணம்

No comments:

Post a Comment