தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 டிசம்பர், 2016

இயேசுநாதரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை!


இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கிறது இந்தக் கல்லறை, கி.பி. 70-ம் ஆண்டுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. இயேசு நாதரின் ஆரம்ப கால சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் “புனித ஜெகோவா விழித்தெழு’ என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் ஜோனா என்கிற தேவதூதரின் கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- See more at: http://www.canadamirror.com/canada/75177.html#sthash.4VGRHA0L.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக