தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, December 14, 2016

ஒரே இரவில் மாயமான கிராமம், நடந்தது என்ன? 100 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்!

ஒரே இரவில் மாயமான கிராமம், நடந்தது என்ன? 100 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்!
ஜெய்சால்மர் அருகாமையில் அமைந்திருக்கும் குல்தாரா எனும் ராஜஸ்தான் கிராமம் ஒரே இரவில் மாயமாகியுள்ளது. இந்தியாவில் பல இடங்கள், பல விஷயங்கள் இன்றளவும் மர்மம் நீங்காதவையாக நீடித்துக் கொண்டிருக்கின்றன. பல கிராமங்கள், பலரின் மரணங்கள் என இது குறித்து நாம் குறிப்பிடலாம். இவற்றில் ஒன்றில் தான் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்தாரா என்ற கிராமம். ஒரே இரவில் ஒருவரை கொல்ல முடியும், அழிக்க முடியும். ஆனால், ஒரு கிராமத்தை? சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமத்திற்கு நேர்ந்த கதி தான் குல்தாராவும் சந்தித்ததா? பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1
எங்கே இருக்கிறது குல்தாரா?
குல்தாரா எனும் இந்த கிராம பகுதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்சால்மர் எனும் மாவட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கிறது. இந்த கிராமமானது 85 குக்கிராமங்களை ஒன்றிணைந்து இயங்கி வந்த இடமாக இருந்துள்ளது. 12 -ம் நூற்றாண்டில் இருந்து இந்த கிராமம் இயங்கி வந்துள்ளதை வரலாற்று தகவல்கள் கொண்டு அறியப்படுகிறது. மேலும், இந்த கிராமத்தில் பாலிவால் (Palilwal) எனும் பிரிவை சேர்ந்த பிராமணர்கள் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
2
இப்பகுதி மக்கள் என்ன செய்து வந்தனர்?
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள் என்றும். அவர்கள் தொழில் மற்றும் விவசாயம் செய்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.
3
இவர்களுக்கு என்ன நடந்தது?
குல்தாரா எனும் இந்த கிராமத்தை சேர்த்து சுற்றி இருந்த 85 குக்கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இதற்கு காரணம் பேய், சாபம் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. 1825-ல் தான் இவர்கள் காணாமல் போயிருக்கின்றனர் என அறியப்படுகிறது.
4
தடயங்கள் இல்லை!
இந்த கிராமத்திலும், சுற்றி இருந்த பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் எங்கு சென்றனர்? என்ன ஆனார்கள் என எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
5
ஜெய்சால்மர் திவான்!
இப்பகுதி அருகாமையில் வசிக்கும் சிலர் ஜெய்சால்மர் திவான் சலீம் சிங் என்பவர் குல்தாரா கிராம தலைவர் மகளை விரும்பியதாகவும். அவரை அடைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டார் என்றும் கூறுகின்றனர்.
6
அச்சுறுத்தல்!
கிராம மக்கள் அந்த அழகிய பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுக்கவே. கிராம மக்களை திவான் அச்சுறுத்தினார், அதிக வரி வசூலிப்பேன் என்று மிரட்டினார். இதற்கு கிராம மக்கள் தயாராக இருக்கவில்லை என்ற தகவல்கள் செவி வழி செய்தியாக பரவலாக கூறப்படுகிறது.
7
தன்மானம்!
தன்மானம், சுய கவுரவம் காரணத்தால் கிராம மக்கள் ஒரே இரவில், தங்கள் உடமைகளை கூட எடுத்து செல்லாமல் கிராமத்தை விட்டு சென்று விட்டனர் என்ற கதை கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இது தான் நடந்ததா? இயற்கை சீற்றத்தால் கிராமம் அழிந்ததா? என்ன தான் நடந்தது என்பது நூறு வருடங்களுக்கு மேல் நீடிக்கும் மர்மமாக இருந்து வருகிறது.
- See more at: http://www.asrilanka.com/2016/12/14/37337#sthash.2am9pter.dpuf

No comments:

Post a Comment