தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 25, 2016

ஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது?

பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் அனைவருமே உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை தான் பின்பற்றி வந்தோம்.
ஆனால், தற்போதைய காலத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி உயர்ந்து விட்டதால், பொது கழிவறையில், பல்வேறு வடிவ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
எனவே நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது தான் நாகரீகம். உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது அநாகரீகமான செயல் என்பதே இன்று மக்களிடம் உள்ள எண்ணமாக இருந்து வருகின்றது.
ஆனால் ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் நின்று சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை பின்பற்றுவதே மிகவும் நல்லது என்று கூறுகின்றார்கள்.
உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்
  • ஆண்கள் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் குறைவதால், நோய் தொற்றுக்கள் ஏற்படுவதும் குறைகிறது.
  • உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சுகாதாரத்திற்கு நல்லது. ஏனெனில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையைப் பயன்படுத்தினால், கழிவறையில் இருக்கும் கழிவுகள் மற்றும் அதை சுத்தம் செய்யும் வேலைகள் மிகவும் எளிதாகிறது.
  • உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, நீங்கள் ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் கழித்துவிட முடிகிறது. ஆனால் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதால், பின்விளைவுகள் தான் அதிகமாகின்றது.
  • சிறுநீர் பாதை நோய் எனப்படும் (lower urinary tract symptoms) உள்ள ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சிறந்த முறைகள். ஏனெனில், முழுமையாக சிறுநீர் கழிக்க இம்முறை பெரிதும் அவர்களுக்கு உதவுகிறது.
  • ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறைகளை பின்பற்றினால், அந்த பிரச்சனைகள் மூலம் விரைவில் விடுபட்டுவிடலாம்.
  • குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment