தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 நவம்பர், 2016

பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் மாறுபட்ட கலாச்சார முறைகள்!

பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்வது இன்று வரை நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
திருமணத்திற்கு முன்னர் அப்பெண் எந்த ஆணுடனும் உறவு கொள்ளாமல், ஒழுக்கமான பெண்ணாக வளர்ந்திருக்கிறாளா? என்பதை சோதனை செய்வது தான் கன்னித்தன்மை சோதனை.
இந்த கன்னித்தன்மை சோதனையானது வெவ்வேறு நாடுகளில் பல்வேறு முறையில் செய்யப்படுகிறது.
கிரீஸ்
கிரீஸில் பழங்காலத்தில் திருமணம் முடிந்ததும், முதலிரவு பெண் வீட்டில் நடக்கும். முதலிரவிற்கு கட்டிலை அலங்கரிக்கும் போது படுக்கையில் வெள்ளை நிற விரிப்பை விரிப்பார்கள்.
மறுநாள் காலையில் பெண்ணின் தாயும், மணமகனின் தாயும் அறைக்குள் சென்று, அந்த விரிப்பில் இரத்தக்கறை படிந்துள்ளதா எனப் பார்த்து, அதை பத்திரமாக எடுத்து, வீட்டின் ஜன்னல் அல்லது பால்கனியில் அனைவரது பார்வையிலும் படும்படி தொங்க விட்டு, நாங்கள் எங்கள் பெண்ணை சுத்தமாக வளர்த்துள்ளோம் என வெளிக்காட்டி பெருமைப்படுவார்கள்.
அல்ஜீரியா
கிரீஸில் பின்பற்றப்பட்டு வந்த பழக்கம் அப்படியே அல்ஜீரியாவிலும் பரவியது. ஆனால் முதலிரவின் போது கறைப்படியாமல் இருந்தால், பெண்ணின் அப்பாவும், சகோதரர்களும் அப்பெண்ணை கல்லால் அடித்து கொல்வார்கள்.
அமெரிக்க செவ்விந்திய இனம்
அமெரிக்காவின் செவ்விந்திய இனத்தை சேர்ந்த அகோமாவி பழங்குடியினரிடம் வித்தியாசமான ஓர் சம்பிரதாயம் உள்ளது.
அது ஊரில் நடக்கும் திருவிழாவில் திருமண வயதில் இருக்கும் பெண்களை நீண்ட நேரம் நடனம் ஆடச் சொல்வார்கள். அப்படி நடனம் ஆடும்போது யாராவது ஒருவர் மயங்கி விழுந்தாலோ அல்லது களைப்படைந்தாலோ, அப்பெண்ணிற்கு 100 கசையடி கொடுப்பார்கள்.
இப்படி பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க, பல பெண்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பயந்து நடனம் ஆடுவார்கள்.
எகிப்து
எகிப்து நாட்டில் மனைவியின் கன்னித்திரையைக் கணவன் கிழிப்பதற்கு உரிமை இல்லை. கணவனின் கிராமத்தில் உள்ள பிரசவம் பார்க்கும் பாட்டிக்கும் தான் உண்டு.
அதற்கு முதலிரவு நடப்பதற்கு முன் முதலிரவு நடக்கும் அறைக்கு பாட்டி சென்று, ஒரு மென்மையான பட்டுத் துணியை கைவிரலில் சுற்றிக் கொண்டு, கன்னித் திரையை கிழித்து, வெளியே கொண்டு வந்து காண்பிப்பார்.
அப்போது கறை இல்லாவிட்டால், அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.
கம்போடியா
கம்போடியாவில் ஆசாரியர்கள் பிரசங்கம் செய்வதை விட முக்கிய செயல் ஒன்றையும் செய்வார்.
அது என்னவெனில் திருமண சடங்கின் போது, கம்போடிய ஆசாரியர்கள் ஒயினில் விரலை நனைத்து மணமகளின் கன்னித்திரையை கிழிந்துவிடுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக