தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட 2200 ஆண்டுகள் பழமையான நகரம்


மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடி பள்ளிச்சந்தை புதூரில்
2200 வருடங்கள் பழமையான நகரத்தின் பகுதிகளை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் 2ம் திகதி தொடங்கிய அகழ்வாய்வு பணிகள் செப்டம்பர்
 மாதத்துடன் முடிவு பெற்றது.
சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு
மாற்றியமைத்தது, மேலும் நவநாகரீகத்துடன் மக்கள் வாழ்ந்ததற்கான
அடையாளங்களும் கிடைக்கப் பெற்றதால் இரண்டாம் கட்டமாக தற்போது
அகழ்வாய்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல்
ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான
அகழாய்வு இதுவேயாகும். இதில், கி.பி 3ஆம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல்
 எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

http://news.lankasri.com/history/03/107178

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக