தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, July 15, 2016

செய்யாத குற்றத்துக்காக ஏன் எங்களுக்கு சிறைவாசம்?ஜல்லிக்கட்டை எதிர்பவர்கள் செய்வது இதைத்தான்!


மிருகக்காட்சிசாலை எவ்வளவு பெரிதாகவோ, திறந்ததாகவோ அல்லது நவீன வசதிகள் கொண்டதாகவோ இருந்தாலும் அதில் உள்ள வாய் பேச முடியாத மிருக ஜீவன்களுக்கு அது ஒரு சிறையாகவே இருக்கிறது.
விலங்குகளின் உரிமைகள் தொடர்பான கூர்ந்த அறிவுள்ள இன்றைய காலகட்டத்தில் உயிருள்ள ஒரு மிருகத்தை அதன் வாழ்நாள் பூராகவும் ஓரிடத்தில் அடைத்து வைப்பது மனச்சாட்சிப்படி தவறு என்பது எவருக்கும் தெரியும்.
பரிதாபம் என்னவென்றால் செய்யாத குற்றத்துக்காக மிருகங்கள் இவ்வாறு சிறை வைக்கப்படுவதுதான்.
விலங்கியல் பூங்காக்கள் உலகெங்கும் உள்ளன.
இது சுமார் 200 வருடங்களுக்கு முன்பு மேற்குலக மனிதன் தனது இருப்பிடத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்த அந்நிய தேசங்களுக்கு பிரயாணம் செய்த போது வடிவமைக்கப்பட்ட ஓர் அழகிய எண்ணக்கருவாகும்.
அதேநேரம், அவன் மிருகங்களை காட்சிப்படுத்தவும் இந்தப் பூங்காக்கள் வசதியாக இருந்தன.
விலங்குகளின் உணர்ச்சிகள் குறித்த உணர்வு இல்லாதவனாக இருந்தான் அவன்.
இந்த அரிய, ‘அந்நிய’ ஜீவன்களை பொதுமக்களின் காட்சிக்கு வைப்பதால் கிடைத்த பணத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
குள்ளர்கள், நீர்வாழ் உயிரினங்கள், உருச்சிதைந்த மனிதர்களைக் கூட அவன் கணக்கில் கொள்ளவில்லை.
மிருகக்காட்சி சாலையின் அளவு எவ்வளவாக இருந்தாலும், அது திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தாலும் மிருகங்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.
தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது அந்த ‘கைதி’களுக்குத் தெரியும்தான்.
தமது பரந்த இயற்கை வாழ்விடங்களோடு ஒப்பிடுகையில் சிறிய இடங்களில் வசிக்க மிருகங்கள் பலவந்தப்படுத்தப்படும் போது அவை அதிக கவலை கொள்கின்றன.
இதனால்தான் மிருகக்காட்சி சாலையில் அடைத்து வைக்கப்படும் போது முற்றுமுழுதாக சலிப்படைந்த நிலையில் கோபத்துடன் அவை முன்னும் பின்னும் நடப்பதும் உட்காருவதும் மூச்சுவிட கஷ்டப்படுவதாகவும் காணப்படுகின்றன.
யானைகள் போன்ற பெரிய மிருகங்கள் கால்களில் விலங்குகள் மாட்டப்பட்டு மணிக்கணக்காக நிற்க வைக்கப்படுவதால் அவற்றின் உடம்பில் வலிதரும் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.
காடுகளில் யானை தினமும் சுமார் 12 மணித்தியாலங்கள் நடக்கும். அதன் ஆயுட்காலம் 75 வருடங்களாகும்.
அப்படியென்றால் மிருகக்காட்சி சாலையில் வாழும் ஒரு யானையின் பரிதாப நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
மீன்கள், ஊர்வன, பறவைகள், வண்ணாத்துப்பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளை விட ஆறறிவு குறைந்த ஏனைய மிருகங்கள் கூட மிருகக்காட்சி சாலையின் செயற்கையான அடைக்கப்பட்ட சுற்றுச்சூழலில் வாழ்வதை விரும்புவதில்லை.
உயிர் வாழும் ஒரு ஜீவனின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஒப்பிட்டுக் காண முடியாத சித்திரவதையாகும்.
உண்பது, விளையாடுவது, இனப்பெருக்கம் செய்வது, உறங்குவது போன்ற இயற்கையான செயல்கள் கூட ஒரு மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள மிருகங்களுக்கு தடை செய்யப்பட்ட சூழ்நிலையே காணப்படுகிறது.
எல்லா வனவிலங்குகளினதும் இயற்கை எதிரி மனிதன்தான் என்பதை நாம் மறக்கக் கூடாது.
மனித பயம் அவற்றின் மனதில் அதிகரிக்கின்றது.
அப்படியென்றால் மிருகக்காட்சிசாலைக்கு வருபவர்களுக்குப் பக்கத்தில் இருப்பதை சகித்துக் கொள்வது அந்த மிருகங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இது போதாதென்று மிருகக்காட்சிசாலைக்கு செல்வோரில் பலர் இந்த அப்பாவி மிருகங்களை பகிடி செய்வதும், சீண்டி விளையாடுவதும் அவற்றின் விரக்தியை மேலோங்க செய்து விடுகின்றன.
இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் உயிர்களிடத்தில் கருணை என்ற சித்தாந்தத்தைப் போதித்த புத்தரின் வழிவந்தவர்கள்.
எனவே இந்த மிருகங்களுக்கு வாழ்நாள் சிறைவாசம் அளிக்கும் கொடுமையை இனியும் தொடர்ந்து செய்யக் கூடாது.
மிருகக்காட்சி சாலை என்பது ஒரு மேற்குலக சிந்தனையில் உதித்த கருதுகோளாகும்
மிருகக்காட்சிசாலையை படிப்படியாக குறைத்து பின்னர் நிரந்தரமாக மூடி விடுவதன் மூலம் உயிர்களிடத்தில் கருணை காட்டும் எமது கலாசாரத்தை நாம் உலகுக்கு வெளிப்படுத்தலாம்.
இன்றைய உலகில் தொழில்நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதால் மிருகக்காட்சிசாலைக்குப் பதிலாக உண்மையான ஜீவன்களையுள்ள திரைப்பட பூங்காவை நாம் வடிவமைத்து பராமரிக்கலாம்.
இந்தத் திட்டத்தை உருவாக்க சில யோசனைகளை முன்வைக்கலாம்.
இயன்றவரை மிருகக்காட்சிசாலையிலுள்ள மிருகங்க​ளை அவற்றின் இயற்கை வாழ்விடத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
எஞ்சியுள்ள மிருகங்களை மிருகக்காட்சிசாலையை சுற்றியுள்ள உட்புற பகுதியில் வைத்து பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியாதபடி பராமரிக்க வேண்டும்.
உத்தேச விலங்கியல் பூங்காக்கள் மக்கள் தமது நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளே மிருகங்கள் தமது இயற்கை வாழ்விடங்களில் வசிப்பதை சித்தரிக்கும் ஆவணப்படங்களை திரையிடுவதற்கு வசதியாக அகன்ற திரை, ஸ்டீரியோ என்பவற்றைக் கொண்டவையாக அமைக்க வேண்டும்.
இன்றைய மின்னணுவியல் யுகத்தில் பார்வையாளர்கள் மிருகங்களின் சுற்றுப்புறச் சூழலில் இருப்பதான உணர்வை உண்டாக்க ஒலியும், காட்சிகளும் நேர்த்தியாக கையாளப்பட வேண்டும்.
பார்வையாளர் மிருகங்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதற்காக நியாயமான விலையில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகிக்கலாம்.
எமது நாடு சந்தைப்படுத்தலுக்குரிய பல வளங்கள் இல்லாத வளர்ந்து வரும் ஒரு நாடாகும்.
ஆனால் காருண்யத்தின் அடிப்படையிலான கருதுகோள்கள் எமக்கு உண்டு.
அந்த விதத்தில் பார்க்கும் போது கலாசார ரீதியாக நாம் முன்னேற்றம் அடைந்தவர்கள்.
நாகரிக சமூகத்தில் சித்திரவதையிலிருந்து மிருகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மாறாக வாழ்நாள் வரை அவை குரூரமான முறையில் மிருகக்காட்சிசாலை ஒன்றில் சிறைவைக்கப்படக் கூடாது என்ற கருத்தை நாம் எடுத்துக் கூற வேண்டும்.
மிருகக்காட்சிசாலையை மூடி விட்டு அதற்குப் பதிலாக விலங்கியல் பூங்கா ஒன்றைத் திறப்பதனால் நாம் வனவிலங்குகளிடத்தில் இரக்கம் காண்பிக்கிறோம் என்றதோர் தோற்றப்பாட்டை இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பார்வையாளர்களின் மனதில் உருவாக்க முடியும்.
அப்போது விலங்குகளின் உரிமைகளுக்கு ஆதரவு வழங்குவதில் நாம் உலகத் தலைவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
animals!

No comments:

Post a Comment