தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 7 ஜூன், 2016

அப்பாக்களுக்கு மட்டும்!

அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், தங்கள் குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது.
ஒரு தாய் தனது குழந்தைகளை கருவில் சுமந்தாள், தந்தை தனது வாழ்நாள் முழுவதும் தோளிலும், மனதிலும் சேர்ந்து சுமக்கிறார்.
அம்மா தனது குழந்தைக்கு அன்பினை ஊட்டி வளர்த்தால், அப்பா அறிவை புகட்டி வளர்க்க வேண்டும்.
அப்பாக்கள் என்றாலே, அடிப்பார் மிரட்டுவார் என்ற பெயர் உண்டு, ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை.
தனது பிள்ளை ஒழுக்கத்தில் சிறந்த விளங்க வேண்டும் என்பதற்காக, மனதுக்குள் பாசம் இருந்தாலும், வெளியில் தன்னை ஒரு கோபக்கார அப்பாவாக காட்டிக்கொள்வார்.
காலையில் எழுந்து மனைவி கொடுக்கும் உணவினை வாங்கிகொண்டு, வேலைக்கு செல்லும் அப்பாக்கள் மாலைப்பொழுதில் வீடு திரும்புகையில், தனது குழந்தைகளுக்கு எதையாவது வாங்கி வர வேண்டும் என ஆசைப்படுவார்.
ஏனெனில், அப்பாவின் கைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பிள்ளைகள் ஏராளம், குழந்தைகளுக்கு அடுத்ததாக மனைவியும் இந்த வரிசையில் சேர்ந்துவிடுவாள்.
அவளும், கணவன் வீடு திரும்புகையில் அதை வாங்கிகொண்டு வாருங்கள், இதை வாங்கிவாருங்கள் என செல்ல கட்டளையிட்டு அனுப்புவாள்.
இதற்கெல்லாம் கீழ்படிந்து தனது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்.
பண்டிகை நாட்கள் என்று வந்துவிட்டால், குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பும் ஆடைகளை எடுத்துக்கொடுத்துவிட்டு, தனக்கு மட்டும் பேருக்கு ஒரு ஆடையை எடுத்துக்கொள்வார்.
தனது பிள்ளை நன்றாக படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படும் அவர், படிப்பிற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துவிடுகிறார்.
மகனோ, மகளோ படித்து வேலைக்கு செல்லும் வரை, குடும்ப பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்டு பயணிக்கிறார்.
சில குடும்பத்தில் மகன்கள் கடைசி வரை வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றிக்கொண்டு இருந்தால், மகனை எப்படியாவது திட்டி வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுவார்.
இந்த விடயத்தில், அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை வர, ஒரு கட்டத்தில் தனது மகனுக்கே எதிரியாகிவிடுகிறார்.
வீட்டில் அம்மாக்கள் செய்பவை தான் சிறந்தது என பிள்ளைகள் நினைப்பார்கள், ஆனால் அப்பாக்கள் என்னதான் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து செய்தாலும், அவரின் பெயர் வெளிவருவதில்லை.
இவற்றையெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள் வைத்து பூட்டிவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக