தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 26, 2016

தற்கொலைகளுக்கான காரணிகளும் பிரிந்து வாழ முடியாத காதலும்!


தேர்வில் தோல்வி, தேர்தலில் வீழ்ச்சி. காதலில் தோல்வி, கணவனின் துரோகம், கள்ளக்காதல், வேலை இழப்பு, பிழைப்பின்றி வறுமை, பழி, வியாபாரத்தில் நஷ்டம், வாழ்வில் அவமானம், அரசின் கெடுபிடி, கைப்பொருள் இழப்பு, முதுமைத் துயரம் என்று பலவிதமான காரணங்களைத் தற்கொலைகளுக்கான காரணிகளாக மனநல மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர்.இம்மாதிரியான மரணங்கள் தன்பலியாக மேற்கொள்ளப்படுவது தொன்று தொட்டு நிகழ்கிறது.
.
வால்மீகி இராமாயணத்தில் இராவணனுடைய தாய் வேதவதி தன் கணவர் குஷ்தவகா மாண்டதும் சிதையில் தானும் விழுந்துள்ளாள் என்று கூறகிறது.
.
மகாபாரதத்தில் வாசுதேவன் என்பவர், இறந்ததும் தேவகி, சுபத்ரா, ரோகிணி, மதுரா. ஆகியோரும் கிருஷ்ணன் இறந்தபோது அவர் மனைவியர் ருக்மிணி, காந்தாரி, கைபியா, ஹேமாவதி, ஜாம்பவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து வீர சுவர்க்கம் அடைந்தனர் என்று கூறப் படுகிறது. (கடவுளின் மனைவியருக்கு வீர சொர்க்ககம்)
அன்றில் பறவைகளின் இணையில் ஒன்று மடிந்தாலும் பிறிதொன்று தற்கொலையாக மரணிக்கும் என்றும் சில பறவைகள் கற்களை விழுங்கிப் பின் கீழே தரையில் மோதி இறக்கின்றன என்றும் பறவை இயலாளர் கூறுகின்றனர்.
.
அதிகப்படியான துக்கமோ, பிரிவோ, ஏமாற்ற மோ நேருகிறபோது மனிதர்கள் மட்டுமல்ல. ஐந்தறிவுடைய விலங்கினங்களும் ஏன்? பறவைகளும் கூடத் தம்முயிரைத்தாமே பலியாக்கிக் கொள் கின்றன என்பதைக் குறுந்தொகை இலக்கியப் பாடல் (எண் 69) ஒன்று விளக்குகிறது.
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பிறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்கு வரையடுக்கத்துப் பாய்ந்து
உயிர்செகுக்கும் சாரல் நாட...!
.
கடுவனை (ஆண் குரங்கை) இழந்த பெண் மந்தி துயரம் தாளாது உயர்ந்த மலைமுகட்டினில் இருந்து தற்கொடையாக உயிர்விடுவதை இப்பாடல் புலப்படுத்துகிறது.
.
சோழன் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி மாண்டபோதும், சேரன் குடக்கோ நெடுஞ் சேரலாதன் மாண்டபோதும் அவர்களின் துணைவி யர் கணவர்தம் மார்பைத் தழுவியவாறே உயிர் விட்டனர் என்பதைச் சங்கப்பாடல் புறநானூறு சுட்டிக்காட்டுகிறது.
.
.... பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந்தனரே!
என்று புறநானூற்றின் 62-ஆம் பாடல் கூறுகிறது.
செத்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே.
.
கங்கைமகன்
25.06.2016

No comments:

Post a Comment