தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, June 23, 2016

கறிவேப்பிலையின் மகத்துவங்கள்

எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை உணவிற்கு மணத்தை கொடுப்பதுடன், ஆரோக்கியத்தையும் தருகிறது.
கறிவேப்பிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டேனின்கள் உள்ளன. கொனிம்பைன், கெடிசினி உள்ளிட்ட வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.
வெள்ளை முடி
கறிவேப்பிலை போட்டு காய்ச்சிய எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வர, இளநரை, பரம்பரை நரை முடி வருவதைத் தடுக்கலாம்.
இதய நோய்
கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வர, இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.
நீரிழிவு நோயாளிகள்
தினமும் காலை மற்றும் மாலையில் 10 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைக்கலாம்.
கொழுப்பு கரையும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது கரைந்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
கண்பார்வை மேம்படும்
பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
உடல் உஷ்ணம் குறையும்
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி, பின் அந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வந்தால், உடல் உஷ்ணமானது குறையும்.

No comments:

Post a Comment