தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 மே, 2016

புங்குடுதீவு(Middelburg) வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்!

யாழ்ப்பாணத்தில் வர்த்தகத்துக்கு பெயர்பெற்ற இடம் எனில் அது புங்குடுதீவு என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

பண்டைய காலத்தில் வர்த்தக ரீதியாக அரேபியர்கள் அடிக்கடி வந்துபோன இடமாக புங்குடுதீவு காணப்படுகின்றது.
அத்தோடு சோழர்களும் பல்லவர்களும் இத் தீவை விட்டு வைக்கவில்லை.
தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் உள்ள சில இடங்களுக்கு சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற பெயர்களும் இடப்பட்டுள்ளன.
சர்வதேச வர்த்தக மையமாகவும் புங்குடுதீவு இருந்துள்ளது எனில் பெருமைக்குரியதே.
இவ்வாறான பெருமைகளைக் கொண்ட புங்குடுதீவின் உண்மையான பெயர் “பொன்-கொடு தீவு” என சிலரால் சொல்லப்படுகிறது.
அதாவது பொன் விளையும் பூமி. அனைத்து சர்வதேச வர்த்தக வியாபாரிகளையும் சந்திக்க வைத்த, பண்டைய மன்னர்கள் வணிகம் செய்த இடமான பொன் கொடு தீவு காலப்போக்கில் மருவிமருவி புங்குடுதீவாக மாறியதாக ஒரு வரலாறு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.
பொன்கொடுதீவு என பெயர் வந்தமைக்கு வணிகம் தான் காரணமாக இருந்தாலும்,
ஒரு சிலரால் இவ்வாறும் பேசப்படுகின்றது.
அதாவது எந்தப் பெண்ணையும் இத்தீவில் நம்பி விடலாம் என. அதனாலேயே பொண்கொடுதீவு எனவும் சொல்லப்படுகின்றது.
எதுவாக இருப்பினும் என்னத்தைப் போட்டாலும் பொன்னாக விளையும் மண் பொன்கொடுதீவு ஆகும்.
என்னதான் இருந்தாலும் புங்குடுதீவினருக்கே வெளிச்சம்…!
http://www.jvpnews.com/srilanka/161446.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக