தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 மே, 2016

பிரான்சுக்கு அருகாமையில் அதிசயமான தமிழர் பூமி! (படங்கள் இணைப்பு)!

ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி. தமிழர்கள்க்கு பரிச்சயம் இல்லாத இடம். தமிழர்கள் பலர் கேள்விப்படாத இடம். ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று.

சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன். சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு.

ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே � இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப் பகுதி.

உலகில் � தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சம உரிமை பெற்றும் வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…!!!

விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..!! சிலர் இலங்கையில் (Jaffna & Point Pedro) இருந்தும் குடியேறினார்கள்.

இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர். ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது.

இவர்கள் அனைவரும் இன்று சம உரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள்.

பிரெஞ்சுத் தமிழர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள். இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப் பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக