தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, May 8, 2016

மூன்று ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ வேண்டுமா?

மிகச்சரியான உணவு முறையே நமது வாழ்க்கையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. பொதுவாக நாம் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளேயே அதிகமாக விரும்பி உட்கொள்வோம்.
இந்த இரண்டு வகை உணவிலும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அம்சங்கள் அடங்கியுள்ளன. ஆனால் சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று, இறைச்சி உணவுகளை அதிகமாக விரும்பி உண்ணுபவர்களைவிட காய்கறி உணவு உட்கொள்பவர்கள் 3.6 ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ்வதாக எடுத்துக்கூறுகின்றது.
அமெரிக்காவில் உள்ள மருத்துவ குழாம் ஒன்று இதுகுறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மிக அதிக அளவில் இறைச்சி உணவுகளை எடுத்துக்கொள்பவர்களின் உயிரிழப்பு விகிதம் அதிகரித்து காணப்படுவதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் Red Meat எனப்படும் உணவு வகைகள்தான் மிக ஆபத்தானவை எனவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபகாலங்களில் உணவும் ஆரோக்கியமும் குறித்து வெளியான ஆறு ஆய்வறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே புதிதாய் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புலால் உணவை விட காய்கறி உணவுகளே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என உலகின் தலைசிறந்த மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள் புலால் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் இந்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment