தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 13, 2016

பால சரஸ்வதி பிறந்த தினம் இன்று .



தஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர். இவருடைய முன்னோர் தஞ்சை மாராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார்.

பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது.

இவர் பெற்ற விருதுகள் .
சங்கீத நாடக அகாதமி விருது, 1955[1]
சங்கீத கலாநிதி விருது, 1973 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
இசைப்பேரறிஞர் விருது, 1975[2] ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை
சங்கீத கலாசிகாமணி விருது, 1981, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
பத்ம பூசன் விருது
பத்ம விபூசண் விருது.

No comments:

Post a Comment