தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 17, 2016

கண்ணன் மாயக்கண்ணன் அவனே மணிவண்ணன்!!


புராண நூல்கள் மற்றும் ஜோதிட கணிப்புகள் அடிப்படையில் கிருஷ்ணரின் பிறந்த தேதி கி.மு 3228 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆகவும் மற்றும் அவரின் மறைவு கி.மு. 3102 ஆகவும் இருக்கும் என கருதப்படுகின்றது.[சான்று தேவை]குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த கலிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார் என்று கூறப்படுகிறது
இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.

வாலிப வயதை அடைந்தவுடன் பலராமருடன் மதுரா சென்று, கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அருச்சுனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.
பூமாரி அன்னை ஓர் ஆலயம்

No comments:

Post a Comment